தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்
புதுடில்லி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2022, நவ., 8ம் தேதி பொறுப்பேற்ற டி.ஒய்.சந்திரசூட், 65, அடுத்த மாதம் 10ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, சஞ்சீவ் கன்னா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை, நாட்டின் 51வது தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று நியமித்தார். சந்திரசூட் பணி ஓய்வு பெற்ற பின், நவ., 11ல் சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.