உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்: 11ல் பதவியேற்கிறார்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்: 11ல் பதவியேற்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் வரும் 11ம் தேதி பதவியேற்று கொள்கிறார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஓய்.சந்திரசூட் வரும் நவ.,10ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு, அவருக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து,தனக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார்.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 51வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்,சந்திரசூட் ஓய்வு பெறும் மறுநாள்(நவ.,11) அன்று பதவியேற்க உள்ளார்.* 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் இவர் பிறந்தார். டில்லி பல்கலையில் சட்டம் பயின்றார்.* இவரது தந்தை டில்லி ஐகோர்ட்டின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கண்ணா டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றினார்.* இவர் 1983ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.* கடந்த 2004ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.* டில்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.* ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.* இவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R.Varadarajan
அக் 25, 2024 02:17

முடிவு சரியானதா?


Balakumar V
அக் 24, 2024 23:33

கொலிஜியம் சிஸ்டம்.


Oviya Vijay
அக் 24, 2024 23:29

சங்கி அரசாங்கத்திற்கு ஒத்து ஊதாமல் நேர்மையாக தீர்ப்பு வழங்குங்கள்... விரைவில் ஓய்வு பெறவிருக்கும் மேதகு நீதிபதி சந்திரசூட் போல தைரியaமாக யாருக்கும் பயப்படாமல் உங்கள் கருத்தினை முன்வையுங்கள்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...


Bala
அக் 25, 2024 03:13

தமிழகத்திலும் சங்கிகளின் சிறந்த அரசாங்கம் திரு அண்ணாமலையின் தலைமையில் வெகு விரைவில் உருவாக வேண்டும். சங்கிகளின் சங்கமம் தமிழகத்திலும் நிகழட்டும். வாழ்க வளமுடன்


முக்கிய வீடியோ