உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ட்ரோன் சேமிப்பு கிடங்கு தகர்ப்பு செயற்கைக்கோள் படங்கள் வெளியானது

பாக்., ட்ரோன் சேமிப்பு கிடங்கு தகர்ப்பு செயற்கைக்கோள் படங்கள் வெளியானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானின் முரித் விமானப்படை தளம் மீதான தாக்குதலில், ட்ரோன்கள் சேமித்து வைக்கப்பட்ட நிலத்தடி வளாகம் தகர்க்கப்பட்டது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாக்.,கில் பயங்கரவாத முகாம்களை நம் படையினர் தகர்த்ததால், பாக்., ராணுவம், ட்ரோன் தாக்குதலை நடத்தியது. 4 நாள் நீடித்த போரில், மே 10ல், பாக்.,கின் 9 விமானப்படை தளங்களை குறி வைத்து நம் படையினர் தாக்கினர். உடனே, போர் நிறுத்தத்துக்கு பாக்., ஓடி வந்தது. மறக்க முடியாத அடியை வாங்கியதாலேயே, கதறியபடி பாக்., ஓடி வந்தது, என்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.'மேக்ஸர் டெக்னாலஜிஸ்' நிறுவனம், முரித் விமானப்படை தளத்தின் மிக தெளிவான செயற்கை கோள் படங்களை நேற்று வெளியிட்டது. நம் எல்லையில் இருந்து 150 கி.மீ., தொலைவில், பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் இந்த தளத்தில் தான், நிலத்தடியில் ட்ரோன் சேமிப்பு கிடங்கு உள்ளது. மேலும், சர்கோதா விமானப்படை தளம், ராவல்பிண்டியில் நுார் கான் விமானப்படை தளங்களுக்கும் மிக உதவியாக இருப்பது, முரித். இங்குள்ள, நிலத்தடி ட்ரோன் சேமிப்பு கிடங்கை, மிக துல்லியமாக, நம் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை, செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன. இரண்டடுக்கு ராணுவ பாதுகாப்பு, உயர் கண்காணிப்பு கோபுரங்கள் என உச்ச கட்ட பாதுகாப்பு மண்டலமாக இது உள்ளது. இங்கு, கோட்டை போன்ற பிரதான கட்டடத்தின் 100 அடி தொலைவில், வடக்கு நுழைவு வாயிலில், 10 அடி அகலத்துக்கு மிகப்பெரிய பள்ளம் இருப்பது, செயற்கைக்கோள் படத்தில் தெரிகிறது. பாக்.,கின் நிலத்தடி, ராணுவ உள்கட்டமைப்பை நம் படையினர் தகர்ப்பது, இதுவே முதல் முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thravisham
மே 29, 2025 18:38

பழைய அகண்ட பாரதம் உலகின் மிக பிரம்மாண்டமான தேசமாக இருந்தது. உலக பொருளாதாரத்தில் பாரதத்தின் பங்கு 45% மேல் இருந்தது. முகலாய/ஆங்கிலேயே /வாரிசு, அரசியலால் நாடு நாசமாக தொடங்கியது. நாடு பழைய பெருமையை பெற வேண்டுமானால் மோடி ஓர் சர்வாதிகாரியாக மாற வேண்டும்.


N.Purushothaman
மே 29, 2025 07:57

அடித்த அடியில் ஆறு பில்லியன் டாலருக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது கூட தெரியாமல் ஸ்வீட் எடுத்து கொண்டாடிய அந்த நாட்டு மக்களை நெனச்சா காமடியாதான் இருக்கு ....


Palanisamy Sekar
மே 29, 2025 07:23

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் ன்னு தெளிவா சொல்லியிருந்தார் நம்ம பிரதமர் மோடிஜி அவர்கள். சொன்னதை செய்துகாட்டியது பிரம்மோஸ் ஏவுகணை. நமது நாட்டிலே தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணை. அதனையெல்லாம் விட நம்மை எப்போ பார்த்தாலும் எங்ககிட்ட அணு ஆயுதம் இருக்குன்னு சொன்ன அவர்கள் அதனை சேமித்த இடத்திலும் பிரம்மோஸ் பாய்ந்து அவர்களின் வாழ்க்கையையே புரட்டிபோட்டுவிட்டது என்பதையும் பாக்கே சொல்லும்


Bvanandan
மே 29, 2025 06:26

Super action. Jai Hind


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை