உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவுதி அரேபியாவின் மூத்த மதகுரு காலமானார்

சவுதி அரேபியாவின் மூத்த மதகுரு காலமானார்

ரியாத்:சவுதி அரேபியாவின், 'கிராண்ட் முப்தி' எனப்படும் மூத்த மத குருவாக கால் நுாற்றாண்டு பதவி வகித்த, ஷேக் அப்துல் அஜிஸ் பின் அப்துல்லா அல் ஷேக், 82, காலமானார். முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொள்ளும் மெக்கா மற்றும் மதீனா, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ளன. அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க மதத் தலைவராக இருந்தவர் அல் ஷேக். கடந்த 1999ல், கிராண்ட் முப்தியாக சவுதி மன்னரால் நியமிக்கப்பட்டார். சவுதி அரேபியாவில் மத சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், முஸ்லிம் நீதித்துறை கட்டமைப்பிலும் பெரும் பங்கு வகித்தார். ஷரியத் சட்டம் மற்றும் பத்வாக்களை பிறப்பித்ததில் முக்கிய பங்காற்றிய அவர், முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார். சவுதி அரேபியா மட்டுமின்றி அரபு நாடுகளுக்கே புகழ்பெற்ற மதத் தலைவராக விளங்கினார். இந்நிலையில், உடல்நல பாதிப்பால் அவர் நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஜ் அல் சவுத் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை