உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ராகுல்

ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தல் நாளை( நவ.,06) நடக்கும் நிலையில் வாக்காளர்கள் அதிகளவு ஓட்டுப்போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட 'எக்ஸ்' சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: நாளை ஓட்டுப்போடுவதற்கான சாதாரண நாள் மட்டும் அல்ல. பீஹாரின் எதிர்காலத்தின் திசை கண்டறிவதற்கான நாள். உங்களில் பலர் முதல்முறையாக நாளை ஓட்டுப் போட போகிறீர்கள். இது உங்களின் உரிமை மட்டும் அல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய கடமை.ஹரியானாவில் ஓட்டுத் திருட்டு என்ற ஒரு மோசமான விளையாட்டு எப்படி விளையாடப்பட்டது என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் என அனைத்து இடங்களிலும் மக்களின் குரல்கள் ஒடுக்க முயற்சி செய்யப்படுகிறது. தற்போது பீஹார் மீதும், உங்களின் ஓட்டு மற்றும் எதிர்காலம் மீது கண் வைத்துள்ளனர்.நாளை ஓட்டுச்சாவடிகளுக்கு அதிகளவு சென்று மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். ஓட்டுச்சாவடியில் நடக்கும் ஒவ்வொரு சதி, ஒவ்வொரு சூழ்ச்சிக்கும் எதிராக விழிப்புடன் இருங்கள். பொது மக்களிடம் உள்ள விழிப்புணர்வே, ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் ஆகும். பீஹாரின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. ஓட்டுத்திருட்டு, அரசு திருட்டு என்ற சதியை தோற்கடியுங்கள். உண்மை மற்றும் அஹிம்சை வழியில் நடந்து உங்கள் ஓட்டு மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்தப் பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Chandru
நவ 06, 2025 20:46

Democracy will automatically be saved after you get dumped to Tihar prison.


Iyer
நவ 06, 2025 19:56

கவலைப்படாதே பப்பு. பிஹார் மக்கள் காங்கிரஸுடன் சேர்த்து RJD கட்சியையும் பீஹாரிலிருந்து ஒழித்துக்கட்ட தீர்மானித்துவிட்டனர். பிஜேபி 200 சீட் பெற்று ஆட்சி அமைக்கும். ஜனநாயகம் காப்பாற்றப்படும்


பேசும் தமிழன்
நவ 06, 2025 18:27

பப்பு அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.... கான் கிராஸ் கட்சியை தோற்கடித்து ....மக்கள் கண்டிப்பாக ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் .


naranam
நவ 06, 2025 11:49

சரியாகத் தான் சொல்கிறார் இவர்.. மக்கள் அப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதால் தான் இன்று மோடிஜி ஆட்சியில் இருக்கிறார்.. இந்தியாவும் முன்னேற்றப் பாதையில் செல்கிறது..


N Sasikumar Yadhav
நவ 06, 2025 10:54

நிற்க நேரமும் இல்லை வேலையுமில்லை பதவி வெறி பிடித்து என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோமென தெரியாமல் வாய்க்கு வந்ததை உலவுகிறார்


kjpkh
நவ 06, 2025 10:44

வேலை வெட்டி ஒன்றும் இல்லாமல் இருந்தால் இப்படி கண்ட மாதிரி பேச வேண்டியது வரும். ஜனநாயகத்தை மக்கள் காப்பாற்றுவார்கள். இவர் சும்மா இருந்தாலே போதும்.


NALAM VIRUMBI
நவ 06, 2025 10:40

இந்தியாவை ஆளும் கனவு எப்போதோ தகர்ந்து விட்டது.


Rajan A
நவ 06, 2025 10:17

கண்டிப்பாக. உங்களையும் உங்கள் கூட்டாளிகளையும் வீட்டுக்கு உபயோகமாக உழைத்து சாப்பிட வேண்டிய வேளை வந்து விட்டது.


Thirumal Kumaresan
நவ 06, 2025 09:39

ராகுலிடம் இருந்து தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்


Rahim
நவ 06, 2025 09:34

அவ்வளவு இஷ்டமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை