உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திகார் சிறையில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை உயர்வு

திகார் சிறையில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை உயர்வு

புதுடில்லி: டில்லியில் உள்ள திகார் சிறையில், ஊழல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, மத்திய அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகையில், 'திகார் சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகள், கொலைக் குற்றவாளிகள், மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டோர் தான் அடைக்கப்பட்டிருப்பர். தற்போது, ஊழல் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2008ல் ஏழு பேரும், 2009ல் எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆறு பேரும் ஊழல் வழக்கில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேர், தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். சிறை அதிகாரிகளின் நடவடிக்கையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்றார்.அரசு அதிகாரிகளுக்குபத்ம விருதுகள் கிடையாது:'அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, பத்ம விருதுகள் வழங்கப்பட மாட்டாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதாவது:அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, பத்ம விருதுகள் கொடுப்பதில்லை என்ற முடிவை, அரசு எடுத்துள்ளது. எனவே, பத்ம விருதுக்கான பிரிவில், அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் இடம்பெற மாட்டார்கள். அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சிறப்பான சேவையை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் பிரதமர் விருது வழங்கப்படுகிறது. கடந்த 2007ல் இருந்து, இந்த விருது வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் தனிப்பட்ட அதிகாரிகள் அல்லது அதிகாரிகள் அடங்கிய குழு, இந்த விருது பெறுவதற்கு தகுதி உடையவர்களாக கருதப்படுகின்றனர்.இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்