உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த டுவிஸ்ட்

மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த டுவிஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் உயிர் பயத்தில் மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன், ஒரு சில நாட்களில் அவரை மீண்டும் அழைத்து வந்தார்.உ.பி.,யின் சந்த் சபீர் நகரின் கடார் ஜாட் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பப்லு. இவர் கடந்த 2017 ம் ஆண்டு கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளியூரில் வேலை செய்து வந்த பப்லுவுக்கு, அவரது மனைவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்தது.ஊர் திரும்பிய பப்லு இது குறித்து விசாரித்ததில், 18 மாதங்களாக , ராதிகா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை தெரிந்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தன் மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். குழந்தைகளை தானேவளர்ப்பதாகவும் கூறிய அவர், காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர்களை கொலை செய்யும் சம்பவங்களால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.தொடர்ந்து ராதிகா, காதலன் விகாஸ் என்பவரது வீட்டில் வாழ்ந்து வந்தார்.ஆனால், ராதிகாவின் புதிய மாமியாருக்கு, தனது மருமகள் இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து வந்தது பிடிக்கவில்லை.குழந்தைகள் தாயார் இல்லாமல் வாழ்வது கஷ்டம். அப்படி ஒரு சூழ்நிலை குழந்தைகளுக்கு வேண்டாம். நீ மீண்டும் உன் பழைய கணவன் பப்லுடன் சென்று சேர்ந்து கொள் என்று விகாஸின் தாயார் அறிவுரை கூறினார்.இதனை ஏற்றுக் கொண்ட ராதிகா, தன் பழைய கணவனை தேடிச் சென்றார்.பப்லுவும் இதை ஏற்றுக் கொண்டார்.இது தொடர்பாக பப்லு கூறுகையில், ராதிகா வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மை. அவர் அப்பாவி. அவர் மீண்டும் வந்துவிட்டார். அனைத்துக்கும் நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் குடும்பமாக வாழ்வோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

என்றும் இந்தியன்
ஏப் 03, 2025 15:59

ஒரு மனைவி இரண்டு கணவன் திமுகவில் சேர்ந்தால் உடனே எம்பி க்கு போட்டியிடலாம். இதைத்தான் ஆணும் பெண்ணும் சமம். சம உரிமை என்பது. மாமியார் சொன்னது ஒன்று வெளியில் வந்தது இன்னொன்று. மாமியார் சொன்னது இப்படித்தான் இருந்திருக்கும் "சனியனே ரெண்டு பெத்துப்போட்டுட்டு இங்கே வந்து என்ன என் பைய்யனிடம் குடும்பம் நடத்துவது, நீ அங்கேயே போ என் பைய்யனுக்கு புது பொண்ணை நான் கட்டிவைக்கணும்"


Sathish
ஏப் 03, 2025 10:50

இது என்னடா... பொழப்பா இருக்கு ,


KRISHNAN R
ஏப் 02, 2025 12:14

இது புது மாடல் போல.. மம்


ராஜ்
ஏப் 02, 2025 11:48

இந்த அசிங்கங்களை ஊர் மக்கள் எப்படி ஏற்றுக் கொண்டுள்ளனர்.


சூரஜ்நாத்
ஏப் 02, 2025 07:32

ரெண்டு பேருடனும் சேர்ந்து கூட்டு குடும்பமாக வாழலாமே...


Yes your honor
ஏப் 03, 2025 10:11

தமிழ்நாட்டிலேயே இதற்கு மிகப் பெரிய உதாரணம் உள்ளதே.


N Annamalai
ஏப் 02, 2025 06:10

ஒரு ஐந்து வருடம் தொடர் எடுக்க வேண்டிய கதை .


Arul. K
ஏப் 02, 2025 05:49

அடுத்து ஒரு வருடம் சென்று வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைக்க வேண்டியிருக்கும்


Kasimani Baskaran
ஏப் 02, 2025 03:59

நல்ல காமடி மணைவி , காமடி கணவன்... மொத்தத்தில் காமடி குடும்பம்...


தாமரை மலர்கிறது
ஏப் 02, 2025 01:17

அனைத்து கணவர்களும் இதே மாதிரி இளிச்சவாயர்களாக இருந்தால், இவ்வுலகம் அமைதியாக இருக்கும்.


Kundalakesi
ஏப் 02, 2025 00:55

பல கணவன் மனைவிகள் குழந்தைகளுக்காக தான் அமைதியாக உள்ளனர்.


சமீபத்திய செய்தி