உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி பஸ் ஓட்டுனர் மாணவியுடன் தற்கொலை 

பள்ளி பஸ் ஓட்டுனர் மாணவியுடன் தற்கொலை 

சிக்கமகளூரு: சிக்கமகளூரு, அஜ்ஜம்புராவின், கிரியாபுரா கிராமத்தில், ஞானதீபா என்ற பெயரில், தனியார் பள்ளி உள்ளது. இதில் சந்தோஷ், 28, பஸ் ஓட்டுனராக பணியாற்றினார். பள்ளியில், 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படிக்கிறார்.சிறுமி மீது கண் வைத்திருந்த சந்தோஷ், தன்னை காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடம் குடும்பத்தினரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம், ஆங்கில புத்தாண்டு பார்ட்டிக்கு சென்ற மாணவியை, சந்தோஷ் தன்னுடன் அழைத்து சென்றார். நள்ளிரவு பங்கனகட்டேவில் உள்ள தண்டவாளத்தில், சிறுமியுடன் சேர்ந்து ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை