வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எல்லா ஊரிலும் மின்வாரியம் ஒரே மாதிரிதான் போல் இருக்கிறது
காரணம் மின்வாரியம் .......
மேலும் செய்திகள்
பைக் - கார் மோதல் தாய் பலி; குழந்தைகள் காயம்
16-Mar-2025
கொப்பால்: பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியை மீது, மின்சார ஒயர் விழுந்ததில் உயிரிழந்தார்.கொப்பால் மாவட்டம், கங்காவதியின் கல்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதா சீனிவாஸ், 34. வித்யா நகரில் உள்ள ஸ்ரீ கொட்டிபதி வெங்கடரத்னம் நினைவு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.தினமும், கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்து, பள்ளி பஸ்சில் சென்று வந்தார். நேற்று காலை வழக்கம் போல் கிராமத்தில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது மின்சார ஒயர் அறுந்து விழுந்தது.இதில், மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக கங்காவதி ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த ஆசிரியை ஹரிதாவுக்கு, 4 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
எல்லா ஊரிலும் மின்வாரியம் ஒரே மாதிரிதான் போல் இருக்கிறது
காரணம் மின்வாரியம் .......
16-Mar-2025