உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒருவரை திட்டுவது தற்கொலைக்கு துாண்டுவதாகாது: உச்ச நீதிமன்றம்

ஒருவரை திட்டுவது தற்கொலைக்கு துாண்டுவதாகாது: உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஒருவரை திட்டுவது தற்கொலைக்கு துாண்டுவதாகாது' என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மாணவர் ஒருவரை திட்டி தற்கொலைக்கு துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை வழக்கில் இருந்து விடுவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றின் விடுதி பொறுப்பாளர், அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவர் அளித்த புகாரின்படி, சக மாணவரை திட்டினார். இதனால் மனமுடைந்த அந்த மாணவர், விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், தற்கொலைக்கு துாண்டியதாக கூறி விடுதி பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுதி பொறுப்பாளரை விடுவிக்க மறுத்தது. இதை எதிர்த்து, விடுதி பொறுப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், 'தற்கொலை செய்த மாணவர், மீண்டும் அதே குற்றத்தை செய்யாமலிருக்கவே, விடுதி பொறுப்பாளர் என்ற முறையில் கடிந்து கொண்டேன். அவருக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது' என, குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:இந்த விவகாரத்தை முழுமையாக பரிசீலித்தோம். திட்டுவதால் இவ்வளவு பெரிய துயரம் ஏற்படும் என, எந்தவொரு சாதாரண நபரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. சக மாணவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே, தற்கொலை செய்த மாணவரை விடுதி பொறுப்பாளர் என்ற முறையில் கடிந்து கொண்டுள்ளார். இது, தற்கொலைக்கு துாண்டுவதாகாது. வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

lana
ஜூன் 02, 2025 11:29

எந்த மாணவர்கள் ஐயும் யாரும் திட்ட கண்டிக்க கூடாது. அவர்கள் ஐ திட்டி கண்டித்து நல்வழியில் செலுத்தினால் நாளை எங்கள் கட்சிக்கு அதிக அளவில் உ.பி கள் கிடைப்பது எப்படி. தேர்வு வைப்பது ஏ கூடாது எனும் மாநிலத்தில் கண்டிக்கும் உரிமை எல்லாம் ஆசிரியர்கள் க்கு இல்லை. வேண்டுமானால் அவர்கள் உங்களை கண்டிக்க தண்டிக்க அனுமதி வழங்கலாம்


Kjp
ஜூன் 02, 2025 09:56

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.நன்கு தெரிந்த பிறகுதான் தீர்ப்பு வழங்குகிறார்களா.


Padmasridharan
ஜூன் 02, 2025 08:26

தனிமையில் திட்டினாரா அல்லது பலரின் முன் திட்டினாரா.. என்ன மாதிரி வார்த்தைகளை உபயோகித்தாரென்று செய்தியில் கூறப்படவில்லை. காவலர்கள் கடற்கரை போன்ற பொது இடங்களில் பணம் புடுங்குவதற்காக எல்லோரையும் ஒருமையில் அசிங்கமான வார்த்தைகளால்தான் பேசுகின்றனர். இதனால் பெண்களும், ஆண்களும் தற்கொலைக்கு முயற்சிப்பதும் நடக்கின்றது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 02, 2025 07:54

உணர்வு பூர்வமாக வாக்களிப்பவர்கள் தவறான, ஆபத்தான, மனப்பிறழ்வு கொண்ட அரசியல்வாதிகளை மக்கள் மன்றங்களுக்கு அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட மக்களைக்கொண்ட ஒரு மாநிலத்தில் ஒரு மாணவர் மனதளவில் பலவீனமாக இருப்பது இயல்பே .....


R SRINIVASAN
ஜூன் 02, 2025 07:22

மனிதன் வாக்கினால் 5 விதமான பாபங்களை செய்வதாக தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவனை திட்டுவது அவனை கொலை செய்வதற்கு சமம். தன்னை தானே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். தெரிந்தே பொய் சொல்லுவது. புறம் கூறுவது. தான் பேசுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே பேசுவது. உதாரணமாக மகா பாரதத்தில் ஜயத்ரதன் வதம். இவன் தந்தை ஒரு ராஜ ரிஷி. இவன் பிறக்கும்போது வானத்தில் அசரீரி ஒலித்தது இவனுக்கு ஒரு வீரனால் சாவு என்று. இவன் அப்பன் உடனே என் மகனின் தலையை எவன் கீழே தள்ளுகிறானோ அவன் தலை சுக்கு நூறாக வெடிக்க வேண்டும் என்று சாபமிட்டான். அபிமன்யுவின் சாவுக்கு காரணமான ஜயத்ரதனை 14-ம் நாள் யுத்ததில் சூர்யாஸ்தமனத்திற்குள் வதம் செய்வேன் என்று சபதமிடுகிறான். இதை கேட்ட துரியோதனன் ஜயத்ரதனை படைகளின் கடைசில் ஒளித்து வைக்கிறான். ஆனால் கிருஷ்ணரோ அன்று தேரை வேகமாக ஓட்டிச்சென்று பாதி தூரத்திற்கு மேல் கடந்து விடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகப்போவதை உணர்ந்த கிருஷ்ணர் தன் பார்வையாலேயே சூரியனை மறைத்து விடுகிறார்.எங்கும் இருட்டாகி விடுகிறது. ஜயத்ரதன் வெளியே வந்து விடுகிறான். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சூரியன் மறையவில்லை. நான்தான் மறைத்து வைத்திருக்கிறேன். இப்பொழுது அம்பை விட்டு அவன் தலையை வெட்டிவிடு. கிருஷ்ணர் சொன்னபடி அர்ஜுனன் ஜெயத்ரன் தலையை வெட்டியதோடு அல்லாமல் கங்கை கரையில் உட்கார்ந்து கைகளை விரித்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் போது அவன் தந்தையின் கையில் இந்த தலை பட்டு கீழே விழுந்து விடுமாறு செய்கிறான், அதனால் அவன் தந்தை கேட்ட வரத்தின்படி அவன் தலையே சுக்கு நூறாக வெடிக்கிறது. என் கருத்துப்படி அந்த விடுதியாளர் பையனிடம் அன்பாக சொல்லி இனிமேல் அவ்வாறு செய்யாமல் இருக்க அறிவுறுத்தி இருக்கலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 02, 2025 08:32

நன்றி .... சோ எழுதிய மஹாபாரதம் பேசுகிறது என்னும் நூலில் ஜயத்ரதனின் மரணம் குறித்துப் படித்துள்ளோம் ....


theruvasagan
ஜூன் 02, 2025 11:06

தற்காலத்திலும் பல ஜயத்ரதர்களை தண்டனைக்கு ஆளாக்காமல் துரியோதனர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை வெளிக்கொணர்ந்து தண்டனையை அனுபவிக்க வைக்கும் நியாயமான காரியத்தைச் செய்யாமல் கிருஷ்ணர்களும் அர்ஜுனர்களும் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்களே. விடியல் எப்போது பிறக்கும். இருட்டு எப்போது விலகும்.


Kasimani Baskaran
ஜூன் 02, 2025 03:42

இது போன்ற உலகின் சிறந்த பஞ்சாயத்து இந்தியாவில் மட்டுமே நடக்கும்.. கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கிக்கிடக்கும் பொழுது ஒரு தற்கொலை மேஜை வரை செல்வது மகா கேவலம்..


சமீபத்திய செய்தி