உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் வாட்டி வதைக்கும் வெயில்: பள்ளி நேரத்தில் மாற்றம்

ஒடிசாவில் வாட்டி வதைக்கும் வெயில்: பள்ளி நேரத்தில் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பள்ளி குழந்தைகளை அதில் இருந்து பாதுகாப்பதற்காக பள்ளி நேரத்தை காலை 6:30 மணியில் இருந்து காலை 10:30 மணி வரை மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.பருவமழை காலம் முடிந்து வெயில் வதைக்க துவங்கி உள்ளது. பல மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் துவக்கத்திலேயே, வெப்பநிலை அதிகரித்து நிலைமை மோசமாக காணப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவில் வெயிலின் கடுமையில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்க, பள்ளி நேரத்தை அம்மாநில அரசு மாற்றி அமைத்து உள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை 6:30 மணி முதல் காலை 10:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் செயல்படும் எனவும், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.மேலும்,* அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்* தேவைப்படும் இடங்களில் பள்ளி வளாகத்திற்குள் ஓஆர்எஸ் பாக்கெட்கள் வைக்க வேண்டும்.* குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. வானிலையை கண்காணித்து பள்ளி நேரத்தை மாற்றி அமைக்கவும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jai Sriram
மார் 20, 2025 23:18

காலை 10:30 க்கு வீட்டுக்கு செல்லும் வழியில் வெயில் இருக்காதா ? 8 மணிக்கு ஆரம்பிச்சு 5 மணிக்கு அப்புறம் விட்டாலே குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். PET பீரியட் 4 மணிக்கு மேல் வைக்க வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை