உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு

டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு

புதுடில்லி:பாகிஸ்தானுடனான மோதல் தீவிரமடைந்துள்ளதால் டில்லி முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துணை ராணுவ வீரர்கள் உட்பட கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மண்டலங்களின் சிறப்பு ஆணையர்கள் 15 மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன் உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.எந்த சூழ்நிலையையும் சமாளிக்க டில்லி காவல்துறை தயாராக இருப்பதாக, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மால்கள், சந்தைகள், மெட்ரோ நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு காலனிகள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.நகரின் பல இடங்களில் வெடிகுண்டு தடுப்பு படையினர் நாசவேலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.தேசிய தலைநகர் எல்லைப் பகுதிகளில், போலீஸ் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டில்லிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன.சமூக ஊடக தளங்களையும் போலீசார் கண்காணித்து வருவதாக அந்த அதிகாரி கூறினார்.உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவக் குழுக்கள், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவுகளின் தீவிர பங்கேற்பை உள்ளடக்கிய, நிகழ்நேர அவசரகால சூழ்நிலைகளை உருவகப்படுத்தும் போலிப் பயிற்சிகள் பல பகுதிகளில் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !