உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேள்வி கேட்டதால் சூடான ராகுல்: உ.பி., திஷா கூட்டத்தில் சலசலப்பு

கேள்வி கேட்டதால் சூடான ராகுல்: உ.பி., திஷா கூட்டத்தில் சலசலப்பு

ரேபரேலி: உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த உயர்மட்ட சீராய்வு கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும், மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே நிகழ்ந்த காரசார வாக்குவாதம் சமூக ஊடங்களில் வெளியாகி, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி உள்ளது.கண்காணிப்பு அம்மாநிலத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக உள்ள லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில், 'திஷா' எனப்படும் மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டியின் கூட்டம் நடந்தது.ரேபரேலி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அமேதி தொகுதி எம்.பி.,யும், 'திஷா' அமைப்பின் துணைத் தலைவருமான கிஷோரி லால், மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மண்டல தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதில், மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங், ராகுலை நோக்கி கேள்வி கேட்க ஆரம்பித்தார். இதனால் சூடான ராகுல், கூட்டத்திற்கு தான் தலைமையேற்றிருப்பதால், எதை பேசுவது என்றாலும், முன்கூட்டியே தன்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என தெரிவித்தார்.சலசலப்பு இதனால், இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'திஷா' கூட்டத்தில் பங்கேற்பவர்கள், தலைவரிடம் அனுமதி கேட்ட பிறகே பேச வேண்டும் என்பது மரபு. அதை மீறி, மாநில அமைச்சர் பிரதாப் சிங் நடந்து கொண்டதாக, காங்கிரசைச் சேர்ந்த அமேதி எம்.பி.,யான கிஷோரி லால் குற்றஞ்சாட் டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rathna
செப் 14, 2025 12:42

நான் மட்டும் தான் கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்டு பதிலும் சொல்லலாம். அடுத்தவன் கேள்வி கேட்க கூடாது. இதுதான் எங்கள் குடும்ப உரிமை மட்டுமே என்று இருந்த காலம் மாறி விட்டது.


வாய்மையே வெல்லும்
செப் 14, 2025 11:56

ரவுலு சார் .. உங்களுக்கு விவரம் பத்தலை. எப்படி துண்டுசீட்டு ராஜ்ஜியம் இங்க தமிழ்நாட்டுல கொடிகட்டி பறக்குதோ நீங்களும் அவ்வண்ணமே எல்லா வினாவிடையையும் முன்கூட்டியே தெரிஞ்சிட்டு லாவகமா நடந்துக்கணும். என்னதான் இருந்தாலும் இந்த விஷயத்தில் திராவிடமாடல் டெக்னீக் அடிச்சுக்க ஆளு இல்ல.


Barakat Ali
செப் 14, 2025 09:58

எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் ..... ஆகவே கேள்விகளை நான்தான் கேட்பேன் .....


Sun
செப் 14, 2025 09:56

என்னது மற்றுமொரு திராவிட மாடலா? ஏம்ப்பா அமைச்சரே நீ பாட்டுக்கு கேள்வி கேட்குறே? கேக்குற கேள்வியை முன்னாடியே சொன்னாத்தானே வீட்லேர்ந்து என்னால பிட் எழுதி கொண்டு வர முடியும்? இப்புடி திடீர்னு கேள்வி கேட்டா எப்புடி ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 09:31

இது போன்ற மத்திய அரசின் திட்டங்களை விவாதிக்கும் திஷா கூட்டங்கள் தமிழகத்தில் நடந்திருக்கிறதா.


Iyer
செப் 14, 2025 09:21

யாருமே கேள்வி கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார மனப்பான்மையில் தான் நேரு, இந்திரா, ராஜீவ் ஆட்சி நடத்தினார்கள். அந்த காலம் முடிந்துவிட்டது. மக்கள் இப்போது விழிப்படைந்து உள்ளார்கள். இதை ராகுல் உணர்ந்தால் நல்லது


subramanian
செப் 14, 2025 08:40

ராகுல், பாராளுமன்ற நியதிகளை மதிக்க வேண்டும். ஒழுங்கான முறையில் உடை அணிந்து வர வேண்டும். காவலர்களையும், பி ஜே பி எம்பி களை டேக் வாண்டூ முறையில் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.


visu
செப் 14, 2025 07:39

பதிலுக்கு பார்லிமென்டல சபாநாயகர் தலைவர் அவர் பேச்சை நீங்க கேட்பதில்லை அதுபோல இங்கும் அப்படிதான் நடக்கும் என்று அமைச்சர் ராகுலுக்கு பதில் கொடுத்ததை சொல்லலியே


Kasimani Baskaran
செப் 14, 2025 07:35

மேச் பிக்சிங் போலத்தான் விளையாட வேண்டும். கண்டமேனிக்கு கேள்வி கேட்கக்கூடாது. சமூக நீதி போல காங்கிரஸ் நீதி... நல்லா வெளங்கும்


புதிய வீடியோ