செம்பை சங்கீத உற்சவ பொன்விழா கருத்தரங்கு
பாலக்காடு; செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழாவை முன்னிட்டு, கருத்தரங்கு வெகு விமர்சையாக நடந்தது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழா, கடந்த 17ம் தேதி செம்பை கிராமத்தில் தேவஸ்தான துறை அமைச்சர் வாசவன் துவக்கி வைத்தார். பாலக்காடு அரசு செம்பை நினைவு சங்கீத கல்லுாரியில் நேற்று நடந்த கருத்தரங்கை, கல்லுாரி முதல்வர் மனோஜ்குமார் துவக்கி வைத்தார். குருவாயூர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ் தலைமை வகித்தார். கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன் பங்கேற்றார். 'கலை இதழியல்' என்ற தலைப்பில் ஜார்ஜ்.எஸ்.பால் ஆய்வுக் கட்டுரை குறித்து பேசினார். தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் பிரசாந்த் கிருஷ்ணா மதிப்பீட்டாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், செம்பை சங்கீத உற்சவ துணை குழு உறுப்பினர் ஆனயடி பிரசாத், செம்பை சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.