உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் மூத்த குடிமக்கள் கமிஷன் நாட்டிலேயே முதல்முறையாக அமைப்பு

கேரளாவில் மூத்த குடிமக்கள் கமிஷன் நாட்டிலேயே முதல்முறையாக அமைப்பு

திருவனந்தபுரம், நாட்டிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கான கமிஷனை கேரள அரசு அமைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களின் உரிமைகளை காக்கவும் இந்த கமிஷன் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வசிக்கும் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் அம்மாநில சட்டசபையில் கேரள மூத்த குடிமக்கள் கமிஷன் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நாட்டிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கான கமிஷனை அமைத்து, அதன் தலைவராக சோம பிரசாத் என்பவரை கேரள அரசு நேற்று நியமித்தது. இந்த தகவலை அம்மாநில உயர்கல்வி மற்றும் சமூக நீதித் துறை அமைச்சர் பிந்து உறுதி செய்துள்ளார். கமிஷனின் உறுப்பினர்களாக அமரவில்லா ராமகிருஷ்ணன், ஈ.எம்.ராதா, கே.என்.கே.நம்பூதிரி மற்றும் லோபஸ் மேத்யூ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ''குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிப்பு, சொத்துகளை ஏமாற்றி சுரண்டுவது, ஆதரவற்ற நிலையில் கைவிடுவது உள்பட முதியோருக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க இந்த கமிஷன் உதவும். முதியோர் நலனுக்காக பாடுபடுவதுடன் அவர்களின் மறுவாழ்வுக்கும் இந்த கமிஷன் வழிகாட்டும்'' என அமைச்சர் பிந்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GMM
செப் 04, 2025 08:14

குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்க காரணம் குடும்பத்தில் நீதி, நிர்வாக குறுக்கீடு. தந்தை தான் குடும்ப நீதிபதி. முதியோர் நிலை அடையும் வரை சொத்து பாதுகாப்பில் இருக்கு. அதன் பின் அவர்கள் மரணம் வரை மறு விற்பனை போன்ற எந்த பதிவும் கூடாது. இந்த பாதுகாப்பு இருந்தால் சுரண்டுவது, ஆதரவற்ற நிலை இருக்காது . முதியோர் இல்லம் அதிகம் தேவை. முதியோர் கமிஷன் நல்லது தான். அமுலில் குறைபாடு இருக்கும்.


Iyer
செப் 04, 2025 04:08

பெற்றோர்களையும் - வீட்டில் முதியவர்களையும் அடிப்பது, இழிவுபடுத்துவது, வீட்டை விட்டு விரட்டுவது இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. நீதிநெறிமுறை, நல்லொழுக்கம் எல்லாம் இந்த காலத்தில் மாணவமாணவியருக்கு கற்றுக்கொடுப்பதும் இல்லை கல்விப்பாடத்திட்டத்தில் முதியோர் நலன், முதியோர் சேவை கற்பிக்கவேண்டும் அகில இந்திய அளவில் - அரசு முதீயோர் இல்லம் தொடங்கி - முதியோர் சேவை செய்ய மாணவ மாணவியருக்கு PRACTICAL TRAINING கொடுக்கவேண்டும்


Kasimani Baskaran
செப் 04, 2025 03:50

தமிழகத்தில் ஏற்கனவே இது போல திராவிடர்களை மட்டும் முன்னேற்ற பல கமிஷன் வாங்கும் காட்சிகள் உருவாகி இருக்கிறது.


Ramesh Sargam
செப் 04, 2025 01:06

தமிழகத்திலும் இப்படி ஒரு கமிஷன் அமைக்கப்படவேண்டும். அங்கு பிரச்சினைகளுடன் வரும் மூத்த குடிமக்களை கமிஷன் எதுவும் கேற்காமல் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை