உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; யாத்ரீகர்கள் 7 பேர் பலி; 15 பேர் படுகாயம்

பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; யாத்ரீகர்கள் 7 பேர் பலி; 15 பேர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: நாசிக்-குஜராத் நெடுஞ்சாலையில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், யாத்ரீகர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.மஹாராஷ்டிராவின் திரிம்பகேஷ்வரில் இருந்து குஜராத்தின் துவாரகாவுக்கு யாத்ரீகர்கள் 48 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நாசிக்-குஜராத் நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இது குறித்து காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜி.பாட்டீல் கூறுகையில், யாத்ரீகர்கள் 48 பேரை ஏற்றிச் சென்ற பஸ், சாலையின் தடுப்புச் சுவரை உடைத்து, 35 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் மத்தியப் பிரதேசத்தின் குணா, ஷிவ்புரி மற்றும் அசோக் நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
பிப் 02, 2025 12:13

இன்னிக்கி ஒருத்தர் தூங்க மாட்டாரு.


N Sasikumar Yadhav
பிப் 02, 2025 18:40

உங்க கோபாலபுர எஜமானர்தானே . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு உங்க திராவிட எஜமான் ஒருவாரம் தூங்கவில்லையாம்


sundarsvpr
பிப் 02, 2025 11:13

விபத்து ஏற்படுவது ஆண்டவனின் திருவிளையாடல். நில உலகில் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பயணிகளை தவிர சில நேரங்களில் ஓட்டுனர் நடத்துனர் இறக்கின்றனர் முதலாளியும் குற்றவாளிதான். வாகனம் நல்ல நிலையில் இருந்ததா என்பதனை பார்ப்பதில்லை. பொதுவாய் அரசு நிர்வாக வாகனங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை