உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் நக்சல்கள் 7 பேர் சுட்டுக் கொலை

தெலுங்கானாவில் நக்சல்கள் 7 பேர் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், நக்சலைட்டுகள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுக்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zwe62fri&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் நக்சலைட்டுகள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எஸ்.பி., ஷபரீஷ் கூறுகையில், 'வனப்பகுதியில் போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. தப்பி ஓடிய நக்சலைட்டுகளை வலைவீசி தேடி வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 13:35

இப்போதுதான் கருநாடகவில் ஒரு ஆக்ஷன் முடிந்தது , ஆனால் அவர்களில் பாதி பெரு தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து விட்டதாக லோக்கல் செய்திகள் வந்ததே


Ramesh Sargam
டிச 01, 2024 13:10

இந்த நக்சலைட்டுகள் தொல்லை என்று முடிவுக்கு வரும் இந்தியாவில்? வரும். எப்பொழுது என்றால் அவர்களுக்கு உதவி செய்யும் மக்கள் அந்த உதவியை நிறுத்தினால் நக்சலைட்டுகள் தொல்லை முடிவுக்கு வரும். மக்கள் என்றைக்கு நிறுத்துவார்கள்? அரசு, காவல்துறையினர் அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுத்தால்? அரசு, காவல்துறையினர் அவர்களுக்கு என்று நிரந்தர பாதுகாப்பு கொடுப்பார்கள்? அது அந்த ஆண்டவனுக்கே தெரியவில்லையாம்.


முக்கிய வீடியோ