உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதீஷை அடுத்து பரூக் கட்சி: வீக் ஆகுது இண்டியா கூட்டணி

நிதீஷை அடுத்து பரூக் கட்சி: வீக் ஆகுது இண்டியா கூட்டணி

ஜம்மு: பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் காங்., கூட்டணியில் இருந்து விலகி பா.ஜவுடன் கைகோர்த்த அதே நாளில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பா.ஜ.,வில் இணைந்தனர். பா.ஜ.,வுக்கு எதிராக பல கட்சிகளை கூட்டணியாக இணைத்து ஒரு பெரும் பலத்தை காட்டலாம் என நினைத்த காங்கிரஸ் எண்ணத்தில் சறுக்கல் ஏற்படுவது தொடர்கிறது. 'இண்டியா ' என்ற கூட்டணியில் தொகுதி பங்கீட்டால் மனக்கசப்பு ஏற்பட்டதால் மம்தா, கெஜ்ரிவால், அவரவர் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் நாளுக்கு நாள் இண்டியா கூட்டணி பலவீனமடைந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக பேசப்பட்ட நிதீஷ்குமார் கூட ராஷ்ட்டிரிய ஜனதாதள கூட்டணியை முறித்து பா.ஜ.வுடன் மீண்டும் இணைந்துள்ளார். நேற்று நடந்த அணிமாற்றத்தின் அதே நாளிலேயே இண்டியா கூட்டணியில் உள்ள தேசியமாநாட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் கத்துவா மாவட்ட தலைவர் சஞ்சீவ் கஜூரியா தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார். இவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அடக்கம் . இதன் இணைப்பு விழா காஷ்மீர் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரெய்னா வரவேற்றார்.

மோடியின் நிர்வாகம் கவர்ந்தது

'பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலன் பேணும் அரசாக உள்ளது. அவரது திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று பலன் அளிக்கிறது. இது என்னை கவர்ந்தது' என கட்சியில் சேர்ந்த கஜூரியா கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைந்ததால் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக்அப்துல்லா கவலை அடைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

jayvee
ஜன 29, 2024 13:40

ஏற்கனவே தொடும் தொடாமலும் பட்டும் படாமலும் பிரிவினைவாதம் பாக்கிஸ்தான் ஆதரவு என்று இருக்கும் பாரூக் இனி முழுநேர பாக்கிஸ்தான் ஆதரவாளராக மாறிவிடுவார்


Godfather_Senior
ஜன 29, 2024 12:11

Black dotted I.N.D.I. alliance broke even before it got started Now only the leftovers like DMK/UBT/Communists are with congress and they too will split away as and when the seat sharing talks . Really, the entire opposition parties are working hard to a Congress mukth Bharat than the BJP's efforts And that is really good for the nation.


RAMAKRISHNAN NATESAN
ஜன 29, 2024 12:09

ஆட்சிக்கு வந்து நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும் என்று நிஜமாகவே நினைக்கும் ஒரு கூட்டணி தங்களுக்குள் உள்ள பூசல்கள், போட்டிகளை மறந்து ஏன் ஆக்கபூர்வமாகச் செயல்படக் கூடாது ????


மதுரை வாசு
ஜன 29, 2024 19:10

புள்ளி ராசாக்களுக்கு மக்களுக்கு நல்லது செய்வது என்றால் என்னவென்றுகூட தெரியாதே...


Duruvesan
ஜன 29, 2024 12:01

விடியல் சார் நம்ம கம்பெனில அந்த பிரச்சனை வராது


Godyes
ஜன 29, 2024 11:52

பரூக் அப்துல்லா காங்கிரஸ்காரனை நம்புவது நீந்த தெரியாதவன் ஆற்றில் விழுந்த கதை.


Hari
ஜன 29, 2024 13:31

"இந்த பழமொழி புதுசாக இருக்கிறது" இருப்பினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்


RAAJ68
ஜன 29, 2024 11:09

இண்டியா கூட்டணி அல்ல... இண்டி கூட்டணி இண்டி கூட்டணி என்று ஆயிரம் தடவை இம்போஷிசன் எழுதுங்கள். in English it is I.N.D.I. ALLIANCE NOT INDIA ALLIANCE. தமிழிலும் அது போல இண்டி கூட்டணிதான்.


veeramani
ஜன 29, 2024 10:22

காஷ்மீரின் இன்றைய நிலைமை வெகு அருமை. சுமார் நுறு சினிமா படப்பிடிப்புகள் நடந்துகொண்டுள்ளன. இதேபோல லடாக்கில் மிக அருமையான சூழல் உள்ளது. இதுவெல்லாம் இந்திய தாயின் அருமை மகனார் திரு மோடி அவர்களின் அரசாட்சியில் நடந்துள்ளது. இதேநிலை வருங்காலங்களில் தொடர ஆட்சி தொடரவேண்டும். மேலும் அப்துல்லா, முப்தி குடும்பங்களையும் கைகளை கட்டி வைக்கவேண்டும். விரைவில் கில்ஜித் பைடிஸ்தான் இந்தியாவுடன் வரவுள்ளது. கன்யாகுமரி முதல் கில்ஜித்-பலடிஸ்தான் இந்தியா தான்.


mindum vasantham
ஜன 29, 2024 10:02

Inge mattum congress kodukkum seat vaangi kollum nilayil DMK,Edappadi ithil rajathanthiri


ராமகிருஷ்ணன்
ஜன 29, 2024 09:58

எல்லாம் பால ராமர் மகிமை. இறை நம்பிக்கை உள்ள வட இந்திய இந்துக்களின் மனதை அங்குள்ள கட்சிகள் உணர்ந்து உள்ளார்கள். தமிழக திமுகவினரின் மனதில் பீதி இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டார்கள். கீழே விழுந்து மிதி வாங்கி அனுபவிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை