நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: மியான்மருக்கு உதவி செய்யும் நாடுகள்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மியான்மருக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உதவி செய்வது தெரியவந்துள்ளது.ராணுவ ஆட்சி காரணமாக, பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக மியான்மர் வறுமையின் பிடியில் உள்ளது. நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் காரணமாக அந்நாட்டில் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தி உள்ள ராணுவ அரசு, சர்வதேச நாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்து இருக்கிறது. அந்த நாடுக்கு பின்வரும் நாடுகள் உதவி வருகின்றன.இந்தியாமியான்மருக்கு உதவ ' ஆபரேஷன் பிரம்மா' நடவடிக்கையை இந்தியா துவக்கி உள்ளது. அந்நாட்டிற்கு 118 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இத்துடன் தேடுதல் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட குழுவினரும் விரைந்துள்ளனர். விரைவில் நிவாரண உதவிகளுடன் ராணுவ கப்பல் மியான்மர் கிளம்ப உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.சீனாமியான்மருடன் உள்ள நீண்ட கால தொடர்பை உறுதி செய்வதற்காக 37 பேர் கொண்ட நிவாரண மற்றும் மீட்பு குழுவை சீனா அனுப்பிவைத்து உள்ளது. அந்நாட்டிற்கு உதவி செய்ய முதல் நாடாக சீனா குழுவை அனுப்பி வைத்து உள்ளது. இக்குழுவினர் உயிருடன் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் கருவிகள், பூகம்பம் எச்சரிக்கை சாதனம், டுரோன்கள், சிசிடிவி உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளனர்.ரஷ்யாமியான்மரில் ஏற்பட்ட துயரத்திற்கு இரங்கல தெரிவித்து உள்ள ரஷ்ய அதிபர் புடின், நிவாரண பொருட்கள் மற்றும் மீட்புக்குழுவினரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்து உள்ளார்.அமெரிக்காமியான்மர் பூகம்பத்தை மோசமானது எனக்கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டிற்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.ஐரோப்பிய நாடுகளும் 27 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்தவதாக அறிவித்து உள்ளன. தென் கொரியா, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உதவ முன்வந்து உள்ளன.