உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதம் பார்த்தது பாலியல் புகார்: ‛ரஞ்சிதமே பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது

பதம் பார்த்தது பாலியல் புகார்: ‛ரஞ்சிதமே பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : பாலியல் புகாருக்கு உள்ளாகி தலைமறைவாக இருந்த பிரபல நடன இயக்குனர் ஜானி பெங்களூவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய விருது பெற்றவர்

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. வித்தியாசமான நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். 'செல்லம்மா செல்லம்மா, மேகம் கருக்காதா, அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா, ரஞ்சிதமே, காவாலய்யா' என பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பெண்ணே என்ற பாடலுக்கு நடனம் அமைத்தமைக்கு தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சில தினங்களுக்கு முன் 21 வயதான நடன பெண் ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக ஜானி துன்புறுத்தியதாக தெலுங்கானா மாநிலத்தில் ராய்துர்கம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஜானி மீது, 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்), 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 2019ல் இருந்தே அந்த பெண் நடன இயக்குனர் சங்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தசமயம் அவர் மைனர் பெண்ணாக இருந்ததால் ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவானது. இந்த புகார் எதிரொலியாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். அவர் தலைவராக இருந்து வந்த தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் அசோசியேஷன் பதவியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஜானி இன்று(செப்., 19) பெங்களூருவில் வைத்து சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
செப் 19, 2024 19:02

இந்த பெண் கடந்த ஐந்து வருடங்களாக நடன இயக்குனருடன் நன்றாக பழகி, அவர் மூலம் நடிகையாகி பல கோடிகளை சம்பாரித்துவிடலாம் என்ற கனவில் இருந்து வந்துள்ளார். இருப்பினும், நடன இயக்குனர் பிரபலமாக இருந்தாலும், அவர் இவரை நடிகையாகி விட்டால், தனக்கு இதுநாள் கிடைத்துவந்த பழம் போய்விடுமே என்ற பயத்தில் நடிகை ஆக்காமல் விட்டிருக்கலாம். அதனால் காண்டாகி பாலியியல் புகார் கொடுத்துள்ளார். உழைத்தும் சம்பளம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நடிகைக்கு. பிரபலமாக இருப்பவர்கள் இதுநாள் வரை எதுவும் கொடுக்காமல் ஆசை காட்டி ஏமாற்றி தப்பித்து இருக்கலாம். இனி அப்படி இருக்க முடியாது. ஒன்று பழம் சாப்பிடாதீங்க. அப்படி சாப்பிட்டால் அதற்கான விலையை கொடுங்க. விலை அதிகம் என்று தெரிந்தால், முன்னரே ஒதுங்கி கொள்ளுங்கள். அதிக விலை தருகிறேன் என்று பேராசையை காட்டி, பழத்தை ருசித்து விட்டு, ஓடிபோக நினைக்காதீர்கள். ஜெயிலில் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியது தான்.


Azar Mufeen
செப் 19, 2024 18:52

இதுவே குஜராத்தில் புகார் செய்தால் கைதாவது, கத்திரிக்காயாவது, காதல் பற்றாளர் பட்டம் கொடுக்கப்படும்


spr
செப் 19, 2024 14:17

இதுவே தமிழகத்தில் புகார் செய்யப்பட்டால் கைதாவது கத்தரிக்காயாவது அவருக்குக் காதல் மன்னன் பட்டம் தரப்படும்


Apposthalan samlin
செப் 19, 2024 13:56

23 வயது வரை ஏன் புகார் கூறவில்லை 60 வயது பாட்டி 20 வயதில் கெடுத்து விட்டார் என்று சொன்னால் நம்பி விடுவார்களா ? என்னையா சட்டம் .


Anand
செப் 19, 2024 13:41

என்கவுண்டர் கிடையாதா?


GMM
செப் 19, 2024 13:35

குடும்ப தலைவி புகாருக்கும் மற்றவர் புகாருக்கும் காரணம் மாறுபடும் . போலீஸ், வழக்கு , அரசியல் அறிக்கை ஜானியை ஏழ்மை நிலைக்கு கொண்டு வந்து விடும். பிடித்தவருடன் நட்பு. பிடிக்காதவர் மீது பாலியல் புகார்?


Parameswar Bommisetty
செப் 19, 2024 12:47

எதற்கு தலைமறைவாகச் சென்றார்? தவறு செய்யவில்லையெனின் தைரியமாக எதிர் கொள்ளலாமே?


கோவிந்தராசு
செப் 19, 2024 12:43

இவ்வளவு நாள தூங்குனாள இது எல்லாம் பிளாக்மெயிலுக்கு


முக்கிய வீடியோ