உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!

டில்லியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!

புதுடில்லி: டில்லியில் மாணவிகளை பிரபல சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை, தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.டில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தின் இயக்குநரான சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி, 15க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவர் மீது மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான பேச்சு, ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் உரையாடல் ஆகிய புகார்களை தெரிவித்தனர்.அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரபல சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி15க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர் மாணவிகளிடம் பேசும் போது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஆபாசமான செய்திகளை அனுப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசாரிடம் மூன்று நாட்களுக்குள் எப்.ஐ.ஆர்., நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் கோரியுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
செப் 24, 2025 20:40

வட நாட்டில் சாமியாரை நம்பும் கூட்டம் அதிகம். மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கடவுளை வழிபட ஏஜென்ட் தேவை இல்லை. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். உணவையும், மனதையும் கட்டுபவனே நல்ல இறை சாமியாராக இருக்க முடியும். அவர்கள் 10 லக்ஷத்தில் ஒருவர் இருப்பர். அவரை கண்டுபிடிப்பது கடினம்.


Narayanan Muthu
செப் 24, 2025 19:05

நாட்டில் உள்ள அணைத்து சாமியார்களையும் ... நீக்கம் செய்தால் சரியாயிடும்.


Sivakumar
செப் 24, 2025 18:30

அன்றும் இன்றும் என்றும் நான் சொல்வது இதுவே.எல்லா சமூகதிலும் ஒரு 5% தவறு செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இது அந்த சமூகத்தின் தவறல்ல. சுயநலம் பிடித்த அந்தந்த நபர்களின் தவறு.எனவே ஒருவன் தவறுசெய்யும் போதெல்லாம் அவன்சார்ந்த சமூகத்தை குறைசொல்வதை முதலில் கைவிட வேண்டும். அந்தந்த சமூகத்தினர் தான் மிகவும் விழிப்பாக இருந்து தங்களில் இருக்கும் குற்றவாளிகள் தண்டனை பெற உதவவேண்டும். மதத்தின் பெயரால் இதுபோன்றவர்களை காப்பாற்றுவது, முட்டுக்கொடுத்து பதிவிடுவது தான் அந்த மதத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.


Sivakumar
செப் 24, 2025 20:14

இதுபோன்ற சுயநல குற்றவாளிகளால் சீரழிக்கப்படுவது அந்தந்த மதத்தில் இருக்கும் பெண்களே. மாற்றுமத பெண்கள் அல்ல. தங்கள் மத பெண்கள் மீது உண்மையான அக்கறை அந்தந்த மத பக்தர்களுக்கு இருக்குமானால் மத முகமூடி அணிந்திருக்கும் குற்றவாளிகளுக்கு முட்டுக்கொடுக்கும் பதிவோ, அரசியல், சட்ட உதவியோ செய்ய மாட்டார்கள்.


Venugopal S
செப் 24, 2025 17:50

நமது சங்கத்துக்கு இன்று ஒரு நாள் மட்டும் அவசர விடுமுறை அளிக்கப்படுகிறது, யாரும் வெளியே வர வேண்டாம்.தலைமறைவாக பாதுகாப்பாக இருக்கவும்!


Abdul Rahim
செப் 24, 2025 17:38

ஓஹோ சர்ச் பாதிரியார் மௌலவி சம்பந்தப்பட்டிருந்தால் இந்நேரம் ஓடி ஓடி வாந்தி எடுத்திருப்பீங்க இப்போ செய்தது சனாதன சாமியராச்சே அதான் நவமும் அடைபட்டு போயி முட்டு சந்துல ஒளிஞ்சிட்டிங்க போல.


Ganesun Iyer
செப் 24, 2025 17:28

அவசர அவசரமா எல்லா கடவுளிடமும் ஓப்பாரி வைச்சத்தில இருந்து தெரியுது.. பொய் பேர்ல மறைஞ்ச 21ஆம் பக்க உப்பினு...


மாபாதகன்
செப் 24, 2025 17:12

சங்கத்தை கலைச்சிட்டு உடனே தலைமறைவாயிருங்க?? இல்லனா அடி பலமா உழும்?? என்ன சொல்லி முட்டு கொடுக்கிறதுன்னு தெரிலியே?? அந்த பதினைஞ்சு புள்ளைகளும் வெப் சீரிஸ், இன்ஸ்ட்டா பார்த்து கேட்டு போயிட்டாளுக அதனால இப்படி தெய்வ அம்சம் உள்ள சாமியார் மேலே பொய் புகார் கொடுத்ததா சொல்லலாமா?? இது சனாதன சாமியாரை காவு வாங்க பின்னப்பட்ட அந்நிய நாட்டு சதின்னு முட்டு கொடுக்கலாமா?? பெருமாளே?? கர்த்தாவே ?? அல்லாவே ? அடியேனுக்கு வல்லமையை பெலத்தினை தாறுமைய்யா??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை