உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: பிரதமருக்கு சீனா அழைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: பிரதமருக்கு சீனா அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. அவரை வரவேற்பதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.ஆக.,31 மற்றும் செப்.,1 ஆகிய நாட்களில் சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.இத தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குயோ ஜியாகுன் கூறியதாவது: இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடியை அழைக்கிறோம். அவரை வரவேற்கிறேன். அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பலனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும். ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மூலம் வளர்ச்சி இந்த அமைப்பு அடுத்த கட்டத்துக்கு செல்லும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Siva
ஆக 09, 2025 09:20

சீனாவும் ரஷ்யாவும் 4,000 கி.மீ.க்கும் அதிகமான எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும் அவர்கள் பல ஆண்டுகளாக மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள், அதேபோல் இந்தியாவும் சீனாவும் மிகவும் கண்ணியமான, மிகவும் நேர்மையான, ராஜதந்திர விவாத முறையைக் கொண்டிருக்க வேண்டும்.


Ramesh Sargam
ஆக 08, 2025 21:42

ட்ரம்பின் செயல்களால் இந்தியாவுக்கு ஒரு சில நன்மைகளும் ஏற்பட்டிருக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்திய பிரதர் மோடி அவர்களுக்கு சீனா அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும் சீன அதிகாரி ஒருவர் டிரம்ப் வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பு நிலையானது மற்றும் தெளிவானது என்பதை சீனா உறுதிப்படுத்தி உள்ளது. இதுவும் இந்தியாவுக்கு ஒரு மறைமுகமான ஆதரவு சீனாவிடமிருந்து.


ரங்ஸ்
ஆக 08, 2025 19:03

ஐயா, ட்ரம்ப் சூழ்ச்சியை முறியடித்து நம் நாட்டு விவசாயிகள், வணிகர்கள் , முதலீட்டாளர்களை காப்பாற்றுங்கள்.


Senthoora
ஆக 08, 2025 18:50

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. மக்களுக்குத்தான் பெப்பே.


Ramesh Sargam
ஆக 08, 2025 18:37

டிரம்புக்கு மேலும் சிக்கல்.


Amsi Ramesh
ஆக 08, 2025 18:21

டெனால்டு டக் வகையறாவுக்கு எரியும்


முக்கிய வீடியோ