உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவமானப்படுத்த காங்கிரஸ் முயற்சியா: சசிதரூர் சொல்வது இதுதான்!

அவமானப்படுத்த காங்கிரஸ் முயற்சியா: சசிதரூர் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ''அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவுக்கு தனது பெயரை பரிந்துரை செய்யாமல், காங்கிரஸ் அவமானப்படுத்த முயற்சி செய்கிறதா என்ற கேள்வியை காங்கிரஸ் மேலிடத்திடம் தான் கேட்க வேண்டும், '' என அக்கட்சி மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த பட்டியலில் இல்லாத, மூத்த எம்.பி., சசி தரூரின் பெயரை மத்திய அரசு சேர்த்திருப்பது, காங்கிரசை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kmzjdjsk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக சசிதரூர் கூறியதாவது: மத்திய அரசு அமைத்த குழுவில், நான் சேர்க்கப்பட்டதில் அரசியல் ஏதும் இல்லை. தேசம் பிரச்னையில் இருக்கும் போது, மத்திய அரசு குடிமக்களிடம் உதவி கேட்டால் என்ன செய்வீர்கள். நான் உடனடியாக இதற்கு ஒப்புக்கொள்வேன்.பாகிஸ்தானுக்கு எதிராக பல மணி நேரம் போர் தொடர்ந்த நிலையில் நம்மைப் பற்றி சொல்வதற்கான குழுக்களில் நமக்கான பங்கு இருக்க வேண்டும். இதன் அடிப்படையில், மத்திய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளேன். என் மீது காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளதா என்பதற்கு கட்சி மேலிடத்திடம் தான் கேட்க வேண்டும்.குழுவுக்கு தலைமை வகிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்து விட்டேன். என்னை யாராலும் அவமானப்படுத்த முடியாது. எனது உயரம் எனக்கு தெரியும். நாட்டிற்காக எனது சேவையை கேட்கின்றனர். அதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தேசத்திற்கு பணியாற்றே வண்டியது குடிமக்கள் அனைவரின் கடமையாகும்.நம் நாடு மீது தாக்குதல் நடத்தப்படும் போது, நாம் அனைவரும் ஒரே குரலில் பேசுவதுடன், நாட்டிற்காக ஒற்றுமையாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Karthik
மே 18, 2025 23:32

திரு சசிதரூர் ஆகிய நீங்கள்.. மனிதருள் மாணிக்கம் என்பது போல், காங்கிரஸ் எனும் முள்ளில் முளைத்த ரோஜா. நீர் வாழ்க உமது தேசத் தொண்டு வளர்க.. ஜெய்ஹிந்த்..


சிவம்
மே 18, 2025 23:06

கர்ணன் நல்லவந்தான், பாவம் விதி வசத்தால் கௌரவர்களிடம் சேர நேர்ந்தது. அதே நிலைமை தான் சசிக்கும்.


Suppan
மே 18, 2025 21:43

காங்கிரஸ் இருதலைக்கொள்ளி ... சஷி தரூர் தானே காங்கிரசிலிருந்து விலகமாட்டார். காங்கிரஸ் விலக்கினால் பாஜக அவரை சேர்த்துக் கொள்ளும். பாவம் காங்கிரஸ்


Narasimhan
மே 18, 2025 17:53

காங்கிரஸ் ஒரு செத்துப்போன கட்சி. காந்தி என்ற பெயரை கடன் வாங்கி இத்தாலிய பெயரில் சொருகி விட்டால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற நினைப்பு. இனி கனவிலும் அவர்கள் பாச்சா பலிக்காது


Maruthu Pandi
மே 18, 2025 15:27

காங்கிரஸ் கடந்த75 ஆண்டு களாக சும்மா இருந்த தன் பலனை யே ஒவ்வொரு இந்தியனும் வேதனையுடன் அனுபவிக்கிறோம். இன்று மோடி அய்யா நாட்டின் பாது காவலர் அவர் சொல்வதை கேட்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. அவர் வழி காட்டுதலில் சிறப்பாக செயலாற்றுங்கள். காங்கிரஸ் க்கு இனி பாரதத்தில் வேலை இல்லை. அது செல்லா காசு


jaiaaa
மே 18, 2025 15:25

இது போன்ற நண்பரிகளால் மட்டுமே இந்தியா முன்னேறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை