உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கஞ்சா பயிரிட்டவருக்கு 4 ஆண்டு சிறை ஷிவமொக்கா நீதிமன்றம் தீர்ப்பு

கஞ்சா பயிரிட்டவருக்கு 4 ஆண்டு சிறை ஷிவமொக்கா நீதிமன்றம் தீர்ப்பு

ஷிவமொக்கா: இஞ்சி பயிருக்கு இடையே, கஞ்சா பயிரிட்ட நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஷிவமொக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஷிவமொக்கா மாவட்டம், சொரபா தாலுகாவின் சிட்டூர் கிராமத்தில் வசிப்பவர் நிங்கராஜ், 47. இவர், தன் நிலத்தில் இஞ்சி பயிரிட்டிருந்தார். அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், இஞ்சி பயிருக்கு இடையே கஞ்சா பயிரிட்டிருந்தார்.இதுகுறித்து தகவலறிந்த சொரபா கலால் துறை அதிகாரிகள், 2022 செப்டம்பர் 8ம் தேதி, சிட்டூர் கிராமத்துக்கு வந்து சோதனை செய்தனர். இஞ்சி பயிருக்கு இடையே கஞ்சா பயிரிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஐந்து முதல் ஆறு அடி வளர்ந்திருந்த 20 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, நிங்கராஜை கைது செய்தனர்.விசாரணையை முடித்து ஷிவமொக்கா முதன்மை மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில், அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, மஞ்சுநாத் நாயக் நேற்று தீர்ப்பளித்தார்.அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஆறு மாதங்கள் சிறை தண்டனை, 300 கிராம் உலர்ந்த கஞ்சா வைத்திருந்ததற்காக, ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ