இறைச்சி கடைக்கு ஷோபா பெயர்
கொப்பால்: திரைப்பட நட்சத்திரங்களின் பெயரில், கடைகள் திறப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இறைச்சிக் கடைக்கு பா.ஜ., - எம்.பி., ஷோபா பெயரை, அவரது விசுவாசி சூட்டியுள்ளார்.கொப்பாலின் குகனுாரில் வசிப்பவர் காதரி பாபண்ணா கலாலா. ஷோபாவின் தீவிர விசுவாசி. இவரது உருவப்படத்தை தன் கையில் பச்சை குத்தியுள்ளார்.கடந்த 2008ல் தேர்தல் பிரசாரத்துக்காக, கொப்பாலுக்கு ஷோபா வந்திருந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையால் கவரப்பட்ட காதரி பாபண்ணா, அன்று முதல் ஷோபாவின் தீவிர விசுவாசியாகிவிட்டார்.காதரி பாபண்ணா, சமீபத்தில் புதிதாக இறைச்சிக் கடை திறந்துள்ளார். இந்த கடைக்கு ஷோபாவின் பெயரை சூட்டியுள்ளார். ஒரு முறை அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு ஷோபா வந்தபோது, அவரை சந்திக்க காதரி பாபண்ணாவுக்கு அனுமதி கிடைத்தது.