குஜராத் பேரணியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது ஷூ வீச்சு
ஆமதாபாத்: குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியின் பேரணியில் அக்கட்சியின் எம்எல் ஏ மீது ஷூ விசியதால் மோதல் ஏற்பட்டது.குஜராத்தின் ஜாம்நகரில் ஆம் ஆத்மி கட்சி பேரணியில் குஜராத் ஜோடோ என்னும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது, ஆம் ஆத்மி எம்எல்ஏ கோபால் இடாலியா பேசிக்கொண்டிருந்தபோது,பார்வையாளர்களில் ஒருவர் இத்தாலியா மீது ஷூவை வீசியதால் மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று , (டிசம்பர் 5) நடந்தது, ஷூ இத்தாலியா மீது படவில்லை. விசாரணையில் . சத்ரபால்சிங் ஜடேஜா என்ற காங்கிரஸ் தொண்டர் என அடையாளம் காணப்பட்டார்.ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அங்கிருந்த பிறர் உடனடியாக அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, காயமடைந்த அந்த நபரை குரு கோபிந்த் சிங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இடாலியா பின்னர் அந்த நபரை மன்னித்துவிட்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.2017ம் ஆண்டில் அப்போதைய உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா மீது ஒரு போராட்டத்தின் போது ஷூவை வீச முயன்றதற்காக இடாலியா முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதால், இந்தச் சம்பவம் கவனத்தை ஈர்த்தது.