இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு
முஸ்தபாபாத்: வடகிழக்கு டில்லியின் முஸ்தபாபாத் பகுதியில் மெஹ்ராஜ், 25, என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த இளைஞர், உடனடியாக ஜி.டி.பி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதேபோல், தெற்கு டில்லியின் டைக்ரி பகுதியில் சல்மான், 24, என்ற இளைஞர் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. முதலில் அவர்களுக்கிடையே கைகலப்பு நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.படுகாயமடைந்த சல்மான், பாத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றிய போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.