வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமைதி மூர்க்கம்
பெயர் ஒன்றே போதும் தரம் எளிதில் விளங்கும் வைரஸ்
திருவனந்தபுரம்; ஜவுளிக்கடைக்கு வந்த பெண்ணை போட்டோ எடுத்து, 'மார்பிங்' செய்து பணம் கேட்டு மிரட்டிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண், தன் நிச்சயதார்த்தத்திற்காக ஆடைகள் வாங்க அங்குள்ள ஜவுளி கடைக்கு சென்றார். அங்கு ஒரு ஆடையை தேர்வு செய்த அந்த பெண், அதை உடை மாற்றும் அறையில் சென்று அணிந்த பின் வெளியே வந்து, கடை ஊழியரான அஜாஸ், 35, என்பவரிடம், போட்டோ எடுக்கும்படி தன் மொபைல் போனை கொடுத்துள்ளார். ஆனால், அவரோ, தன் போனில் போட்டோ நன்றாக இருக்கும் என்று கூறி, அவரது மொபைல் போனில் படம் எடுத்தார். பின், இளம்பெண்ணின் எண்ணை வாங்கி, 'வாட்ஸாப்'பில் படத்தை அனுப்பி உள்ளார். பின், அந்த போட்டோவை மார்பிங் முறையில் ஆபாச போட்டோவாக மாற்றிய அஜாஸ், அதை அந்த பெண்ணுக்கு அனுப்பி, சமூக வலைத்தளங்களில் அதை வெளியிடாமல் இருக்க தனக்கு, 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மிரட்டி உள்ளார். அந்த பெண், தன் உறவினர்களிடம் கூறியதை தொடர்ந்து, கடைக்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.
அமைதி மூர்க்கம்
பெயர் ஒன்றே போதும் தரம் எளிதில் விளங்கும் வைரஸ்