உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது: தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது: தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி கவாயை, ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தாக்க முயன்றார். கவாய் மீது காலணியை வீச முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ராஜேஷ் கிஷோரை, சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இச்சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தலைமை நீதிபதி வெளிப்படுத்திய கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மை நீதித்துறை அமைப்பின் வலிமையை காட்டுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது. தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தி இருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அதிகார மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது நிறுவனங்களை மதித்து பாதுகாக்கும் மற்றும் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Suppan
அக் 06, 2025 17:50

உங்களுடைய கட்சிக்காரர்கள் சில நீதிபதிகளை அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள்/ அது பரவாயில்லையா ?


THANGARAJAN PADMARAJAN
அக் 06, 2025 17:50

தங்கம்


ramesh
அக் 06, 2025 17:48

அன்று மஹாத்மா காந்தி கூட துப்பாக்கியால் சுடப்பட்டார் . இன்று தலைமை நீதிபதி தாக்கபடுகிறார் . இது நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ளவேண்டும்


V RAMASWAMY
அக் 06, 2025 17:40

Exhibits the very low level of morality and good condut even among the eduated, besides poor security. Culprit should be punished severely to serve as a lesson for others.


ஆரூர் ரங்
அக் 06, 2025 17:40

உங்க ஆளுங்க உச்சிக்குடுமி மன்றம் ன்னு விமர்சித்ததாக படித்திருக்கிறேன். அப்படிக் கூறியிருந்தால் சரியா? அவமதிப்பு இல்லையா?


முக்கிய வீடியோ