ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்
பாலக்காடு: ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற கலால் துறை உதவி ஆய்வாளரை, கேரள அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு கலால் துறை உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சண்முகம், 48. இவர், அக்., 2ம் தேதி கல்லடிக்கோடு என்ற பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் சீருடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டார். மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, கலால் துறை நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் மீறப்பட்டதாக, எஸ்.பி., அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மாநில கலால் துறை ஆணையர் அஜித்குமார், உதவி ஆய்வாளர் சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.