உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னட மொழி பெயர்ப்பில் தவறு: மெட்டா நிறுவனம் மீது சித்தராமையா குற்றச்சாட்டு

கன்னட மொழி பெயர்ப்பில் தவறு: மெட்டா நிறுவனம் மீது சித்தராமையா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கன்னட மொழிபெயர்ப்பில் தவறு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து, சமூக வலைதளத்தில் சித்தராமையா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில், கன்னட மொழிபெயர்ப்பில் தவறு இருக்கிறது. இது போன்ற பிழைகள் உண்மைகளைத் திரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன.அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளைப் பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தானது. எனது ஊடக ஆலோசகர் கே.வி. பிரபாகர் உடனடியாக திருத்தம் செய்ய வலியுறுத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களில் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு முறையாக கடிதம் எழுதியுள்ளார். சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சமூக வலைதளத்தில், மொழிபெயர்ப்பில் பெரும்பாலும் தவறுகள் இருப்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன். தொழில்நுட்ப நிறுவனங்களின் இத்தகைய அலட்சியம் பொதுமக்களின் புரிதல் மற்றும் நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்கும். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கண்ணன்
ஜூலை 18, 2025 12:06

ஆஹா, மெத்தப்படித்தவர் கூறுகிறார், நம்புங்கள்


கண்ணன்
ஜூலை 18, 2025 12:06

ஆஹா, மெத்தப்படித்தவர் கூறுகிறார், நம்புங்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 17, 2025 17:48

AI மூலம் மொழிபெயர்ப்பது தானாக நடக்கும் ஒரு செயல். அதில் தவறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது என்பது அறிவுள்ள எல்லோருக்கும் தெரியும். அதை அந்தந்த நிறுவனங்கள் தங்களின் எச்சரிக்கை பகுதியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. படிக்கும் எல்லாவற்றையும் சொந்த மூளையை பயன்படுத்தி யோசிக்காமல் கண்மூடித்தனமாக நம்பினால் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தினால் ஒன்றும் செய்ய இயலாது.


rama adhavan
ஜூலை 17, 2025 17:25

இவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள். அடுத்தவன் செய்தால் குறை மட்டும் நா கூசாமல் சொல்வார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 16:57

தப்பித வார்த்தா. தெளிவாகப் பேச உங்க ராகுல் அல்லது ஸ்டாலினை உதாரணமாக lக் கொள்ளலாம். சிறப்பான மொழிபெயர்ப்புக்கு தங்கபாலு இருக்க META எதற்கு?.


Easwar Kamal
ஜூலை 17, 2025 16:35

பதவிக்கு ஆபத்து என்றால் உடனே மொழி மேல் பாசத்தை பொழிய வேண்டியது. உங்கள் கன்னட மொழி 2000 ஆண்டு பழமையானது என்று வேணாலும் சொல்லலாம். கன்னடதில் இருந்து பிரிந்ததது தெலுங்கு. இதை யாராலும் மறுக்க முடியாது. இந்த கன்னடர்கள் வரலாற்றை மற்ற முயற்சிதாலும் உண்மை யாராலும் மற்ற முடியாது. உங்கள் மொழிகெல்லாம் அப்பன் தமிழ். அதையும் யாராலும் மற்ற முடியாது.


Suppan
ஜூலை 17, 2025 16:21

சித்தராமையாவிற்கு மெட்டாவைப்பற்றிய புரிதல் இல்லை. இந்த மொழிபெயர்ப்புகள் தவறு இருக்கலாம் என்ற எச்சரிக்கையுடன்தான் வெளியிடப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்னால் வெளியான மொழிபெயர்ப்புகள் தவறுகள் மிகுந்தவையாகவே இருந்திருக்கின்றன. இப்பொழுது பரவாயில்லை. இவை சரியான மொழிபெயர்ப்பு செய்ய இன்னும் சில காலம் பிடிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை