உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா என் குலதெய்வம்: முடா தலைவர் மரிகவுடா உருக்கம்

சித்தராமையா என் குலதெய்வம்: முடா தலைவர் மரிகவுடா உருக்கம்

மைசூரு : ''முதல்வர் சித்தராமையா, என் குலதெய்வம். என்றென்றும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் துரோகம் செய்யமாட்டேன்,'' என, 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணைய தலைவர் மரிகவுடா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையாவின், தற்போதைய நிலைக்கு நானே காரணம் என, குற்றஞ்சாட்டி காங்கிரசின் சில தொண்டர்கள், மைசூரு விமான நிலையத்தில் என்னை தாக்க முயற்சித்தனர். இந்த செயல், எனக்கு வருத்தம்அளித்துள்ளது.கடந்த 2020ம் ஆண்டில், முடாவில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. ஆனால் 2024ம் ஆண்டு மார்ச் 1ல், முடா தலைவராக நான் பொறுப்பேற்றேன்.எனக்கும், இதில் நடந்த முறைகேட்டுக்கும் தொடர்பு இல்லை. தற்போதைக்கு முடா தலைவர் பதவியை, ராஜினாமா செய்ய முடிவு செய்யவில்லை.முதல்வர் சித்தராமையாதான், எனக்கு ஹைகமாண்ட். அவர் உத்தரவிட்டால் நான் ராஜினாமா செய்வேன்.'உன் பதவிக் காலத்தில், எதுவும் நடக்கவில்லை. பேசாமல் இரு' என, என்னை முதல்வர் சமாதானம் செய்தார். என் கவுரவத்தை குலைக்கும் வேலையை, சொந்த கட்சியினர் இனியாவது நிறுத்த வேண்டும்.சமுதாய தலைவர்கள், என் மீதான தவறான கற்பனையை மாற்றிக்கொள்ள வேண்டும். சித்தராமையா என்குலதெய்வம்.அவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை