உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம்

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர: அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒடிசாவுக்கு நேற்று வந்தார்.தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முக ரத்னம், இரு நாட்கள் அரசு முறை பயணமாக ஒடிசாவுக்கு நேற்று வந்தார். தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் மோகன் சரண் மஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்உள்ளிட்டோர், அவரை வரவேற்றனர்.சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை முதல்வர் மோகன் சரண் மஜி நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது, திறன் மேம்பாடு, தொழில் உட்கட்டமைப்பு, நிலையான எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், சிங்கப்பூர் - ஒடிசா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.புரி மாவட்டத்தின் கோனார்க்கில் உள்ள சூரியக் கோவிலையும், புவனேஸ்வரில் உள்ள பாரத் பயோடெக் தடுப்பூசி உற்பத்தி ஆலையையும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று பார்வையிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
ஜன 18, 2025 19:27

மகிழ்ச்சி..


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:56

திட்டம் முழுமை பெற்று வெற்றி பெற வாழ்த்துகள். இரண்டு நாடுகளுக்கும் பரஸ்பர லாபம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.


Barakat Ali
ஜன 18, 2025 07:28

குடும்பக்கட்சியின் கொத்தடிமைகள் கவனிக்க வேண்டிய செய்தி ........ அதாவது தமிழகத்தை விட நல்ல WORKFORCE ஒடிசாவில் இருப்பதாக சிங்கப்பூர் கருதியிருக்காவிட்டால் இப்படி ஒரு ஒப்பந்தம் வர வாய்ப்பில்லை .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை