உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைவர் பதவி  கடையில் கிடைக்காது எதிர் கோஷ்டி மீது சிவகுமார் காட்டம்

தலைவர் பதவி  கடையில் கிடைக்காது எதிர் கோஷ்டி மீது சிவகுமார் காட்டம்

பெங்களூரு: ''கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி கடையில் கிடைக்காது,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் காட்டமாக கூறியுள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நாம் செய்யும் பணிகளை அங்கீகரித்து, கட்சித் தலைவர்கள் உரிய பதவி வழங்குகின்றனர். ஆனால் ஊடகங்கள் மூலம் பதவி கேட்பதை, இப்போதுதான் புதிதாக பார்க்கிறேன். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி கடையில் கிடைக்காது.கட்சி விவகாரம் தொடர்பாக ஏதாவது தகவல்கள் இருந்தால் ஊடகத்தினரை கூட்டி நானே தகவல் கொடுப்பேன். இப்போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை கட்டமைக்க வேண்டும்.கட்சியில் அனைவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர், மேலிடத் தலைவர்கள் திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் யாரும் வெளிப்படையாக பேச வேண்டாம். ஊடகங்கள் முன்பு பேசினாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை. நான் மட்டும் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். மக்கள் நம்மை நம்பி ஓட்டு போட்டு உள்ளனர்.யாருக்காவது பிரச்னை இருந்தால் மாநில தலைவர்களிடம் சென்று பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். கட்சியின் அமைப்பு பலவீனமாக உள்ளது. கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என்று அமைச்சர் சதீஷ் கூறியிருப்பதை பற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். இது பற்றி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தான் பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ