உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொதகுலம் பகுதியில் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசார் ஒருவர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன், சத்தீஸ்கரில் பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், ஆறு பெண்கள் உட்பட 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில், உள்ள பத்ராத்ரி கொதகுலம் பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு, இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
செப் 05, 2024 19:07

இவ்வளவு வருடங்கள் ஆகியும், இந்தியாவில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் தொல்லை தீரவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கமுடியாததற்கு ஒரு காரணம் - அவர்களுக்கு, அவர்கள் இடங்களில் வசிக்கும் மக்களின் ஆதரவு, மற்றும் ஒரு சில அயோக்கிய அரசியல்வாதிகள் ஆதரவு தொடர்ந்து கிடைப்பதால்தான். ஆகையால் அவர்களை முதலில் அடக்கவேண்டும்.


P. VENKATESH RAJA
செப் 05, 2024 16:04

மாவோயிஸ்டுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் இவர்களால் மக்களுக்கு தொந்தரவு வந்து அடிக்கடி செய்யப்படுகிறது. மாவோயிஸ்ட்கள் அரசிற்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அந்த காலம் தற்போது மாறிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை