உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரிசி ஆலையில் புகை: சுவாசித்த 5 பேர் பலி

அரிசி ஆலையில் புகை: சுவாசித்த 5 பேர் பலி

பஹ்ரைச்: உத்தர பிரதேசத்தில், அரிசி ஆலையில் நெல் உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்த ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.உ.பி.,யில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ராஜ்கார்ஹியா அரிசி ஆலை செயல்படுகிறது. இங்கு வழக்கம் போல் நேற்று நெல் உலர்த்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, நெல் உலர்த்தும் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், அதிலிருந்து புகை வெளியேறியது. இதை சுவாசித்த எட்டுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். இதில் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்தில், தீயணைப்பு துறையினர், போலீசார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி