உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தன்னைக் கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்றவர் பிழைத்தார்: பாம்பு செத்தது

தன்னைக் கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்றவர் பிழைத்தார்: பாம்பு செத்தது

பாட்னா: பீஹாரில் தன்னை கடித்த பாம்பை, கூலித் தொழிலாளி ஒருவர் திருப்பி கடித்தார். அதில், பாம்பு உயிரிழந்தது. அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார்.பொதுவாக பாம்பு கடித்து மனிதர்கள் உயிரிழப்பது வழக்கம். சிலர் ஆபத்தான நிலைக்கு சென்று குணமடைவர். ஆனால், இதற்கு மாறாக பீஹாரில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.பீஹாரின் நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் லோஹர். கூலித் தொழிலாளியான இவர், வேலை முடித்துவிட்டு குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்தது. அந்த பாம்பை திருப்பி கடித்தால், தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்ற மூட நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த எண்ணத்தில், தன்னை கடித்த பாம்பை பிடித்து இரண்டு முறை சந்தோஷ் கடித்து உள்ளார். இதில் அந்த பாம்பு அந்த இடத்திலேயே இறந்தது.

நலம்

சந்தோஷ் லோஹர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த பிறகு நலம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் சந்தோஷ் வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாம்பு
ஜூலை 06, 2024 10:08

மனுசனுக்கு உடம்பெல்லாம் விஷம்.


இறைவி
ஜூலை 05, 2024 20:52

பாம்பால் கடிக்கப்பட்டவன் சரக்கு அடித்திருந்தால் விஷ முறிவு மருந்து உடலில் வேலை செய்யாது. அவன் இறந்திருப்பான்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 05, 2024 18:53

கவுண்டமணி செந்தில் ஜோக் தான் ஞாபகம் வருகிறது


Velan
ஜூலை 05, 2024 17:20

ஒரு க் கால் வீரன் சரக்கு அடித்திருக்கலாம்


rama adhavan
ஜூலை 05, 2024 20:52

பாம்புமா?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 05, 2024 21:14

செய்தியைப் படித்துவிட்டு நானும் அப்படித்தான் மது அருந்தியிருப்பார் என்று நினைத்தேன் ....


மேலும் செய்திகள்