உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சூரிய மின்சக்தி திட்டம் 30 லட்சம் வீடுகள் இணைப்பு

 சூரிய மின்சக்தி திட்டம் 30 லட்சம் வீடுகள் இணைப்பு

புதுடில்லி: பிரதமர் மோடி, 'பி.எம்., சூர்ய கர்' எனப்படும் இல்லந்தோறும் சூரிய மின்சக்தி திட்டத்தை, 2024 பிப்ரவரியில் துவக்கினார். இந்த திட்டத்தின் கீழ், வீடுகளின் மேல் தளத்தில் சூரிய மின்சக்தி தகடுகள் நிறுவப்படுகின்றன. 2027க்குள், 1 கோடி வீடுகளில் இந்த அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 12 பொதுத்துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில், 2 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது இத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் வீடுகளில் சூரிய மின் உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கை: நாடு முழுதும் 30 லட்சம் குடும்பங்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் கட்டணத்தை சேமிக்கின்றன. நாட்டின் துாய்மையான எரிசக்தி என்ற பயணத்தில் இது பெருமைக்குரிய மைல்கல். இத்திட்டத்தின் இலக்கு எண்ணிக்கையான, 1 கோடி வீடுகளில் சூரிய மின் அமைப்புகள் நிறுவப்பட்டால், அடுத்த 25 ஆண்டுகளில், ஒரு லட்சம் கோடி யூனிட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தியாகும். இதன் மூலம், 72 கோடி டன் கார்பன் டையாக்சைடு வெளியேற்றம் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை