உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரர் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=akgxiawr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது ராணுவ வீரர் பலத்த காயம் அடைந்து வீரமரணம் அடைந்தார். மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

7 இடங்களில் ரெய்டு

காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக், குப்வாரா, புல்வாமா மற்றும் ஷோபியன் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 இடங்களில் ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் சோதனை நடத்தினர். சமூகவலைதளம் வாயிலாக பங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகார் அடிப்படையில் சோதனை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
செப் 20, 2025 10:44

ராணுவ வீரரின் மரணம் மிகுந்த வேதனை. அங்குள்ள பயங்கரவாதிகள் முற்றிலும் கொள்ளப்படவேண்டும்.


ஆரூர் ரங்
செப் 20, 2025 10:34

பாக் கில் கடுமையான வேலையின்மை காரணமாக ராணுவம் துவக்கியுள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு எளிதில் ஆள் கிடைக்கிறது. எல்லையில் சுரங்கம் அமைத்து அதன் மூலம் பாரத எல்லைக்குள் நுழைந்து விடுகிறார்கள். உள்ளூர் மத வெறியர்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஜமாஅத்துகள் அடைக்கலம் அளிக்கின்றன. உலக வங்கி, IMF, அரபு நாடுகள் அளிக்கும் உதவி நிதியும் பயங்கரவாத இயக்கங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. 1947நாட்டுப்பிரிவினை முழுமையாக நடக்காததுதான் மூல காரணம். மதசார்பற்ற கொள்கை எனும் சிறுபான்மைவாதம் சீரழித்து வருகிறது.


RK
செப் 20, 2025 10:22

இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.