வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வீர மரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் ஷாந்தி.
புதுடில்லி: காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில், இன்று ராணுவ சுபேதார் ராகேஷ் குமார் வீர மரணம் அடைந்தார்.இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:ஜம்மு-காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், இன்று ராணுவ சுபேதார் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.வீர மரணம் அடைந்தவர் ராகேஷ் குமார் என தெரியவந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் கேஷ்வன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் 4 பேர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தவுடன் போலீஸ் பாதுகாப்பு குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 4 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுடன் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
வீர மரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் ஷாந்தி.