உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எல்லாம் என் கண் முன்னே நடந்தது; நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை'' என ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் தெரிவித்தார். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி. என் கண்முன்னே விமான பணி பெண்கள் மற்றும் பயணிகள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mxqqpo1v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமானம் வெடித்த போது எனது இருக்கை அருகே விரிசல் விழுந்தது. அதை பயன்படுத்தி வெளியே குதித்தேன். எனது இடது கையில் தீப்பிடித்தது. உரிய நேரத்தில் மீட்பு படையினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். விமானம் விழுந்த பகுதியின் எதிர் பக்கத்தில் சுவர் இருந்ததால் யாரும் தப்பிக்க முடியவில்லை.

தரைப்பகுதி

நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது. விபத்து குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டறிந்தார். நானும் இறந்திருப்பேன் என்றே நினைத்தேன். என் கண் முன்னே அனைத்து துயர சம்பவங்களும் நிகழ்ந்தது. விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை. இது தான் நான் தப்பிக்க உதவியது.

அவசர வழி

சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன். புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் என்னைச் சுற்றிலும் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில், மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறினேன். இவ்வாறு அவர் கூறினார்.

பூமி சவுகான் பேட்டி

விமானத்தை தவறவிட்ட பயணி, பூமி சவுகான் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் விமானத்தை தவறவிட்டேன். இதனால் உயிர் பிழைத்தேன். நான் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்ததும் எனது உடல் நடுங்கியது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Arun, Chennai
ஜூன் 14, 2025 15:25

Scrutinize him.. I doubt his name


D.Ambujavalli
ஜூன் 13, 2025 18:24

இவரது எத்தனை தலைமுறை முன்னோர்களின் ஆசீர்வாதமோ இவரை இத்தனை கோரமான விபத்திலிருந்து உயிர் தப்ப உதவியிருக்கிறது என்றால் அந்த பெண்மணிக்கு விமான நிலையம் செல்ல late ஆனதால், அவர் ‘late so n so ‘ ஆகாது தப்பினார் கடவுள் காப்பாற்ற நினைத்துவிட்டால் எரியும் விமானத்திலிருந்து, கால தாமதத்தாலும் காப்பாற்றி விடுவார் என்பதற்கு இதைவிட சான்று வேறு வேண்டுமா?


Anantharaman Srinivasan
ஜூன் 13, 2025 14:54

விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமாரின் remaining ஆயுட்காலத்தில் ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மத்தியரசு பொறுப்பேற்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 15:45

தயாரித்த விமானக் கம்பெனிக்கு பொறுப்பில்லை.


Jagan (Proud Sangi )
ஜூன் 13, 2025 19:25

ஏன் ? அவரை விமானத்தில் செல்ல அரசு கட்டாய படுத்தியதா ?


Narasimhan
ஜூன் 13, 2025 14:09

இந்த நிருபர்கள் தொல்லை தாங்க முடியலை. அவர் முழுவதும் குணமடைந்தபின் பேட்டி எடுத்தால் குடியா முழுகிடும்


Varadarajan Nagarajan
ஜூன் 13, 2025 13:27

இந்த கோர விபத்து அதில் உயிரிழந்த பயணிகளை நினைத்து நெஞ்சம் கணக்கின்றனது. நீண்டதூர பயணம் என்பதால் விமானத்தில் அதிக எரிபொருள் இருந்துள்ளது. அதானால் இத்தீவிபத்து மிகப்பெரியதாக இருந்து உயிர்களை காவு வாங்கியுள்ளது. இத்தனை பெரிய விபத்தில் ஒரேஒருவரது உயிர்மட்டும் மிகவும் கெட்டியாக இருந்துள்ளது. கடவுளுக்கு நன்றி.


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 13, 2025 13:26

242 நபரில் ஒரு நபர் மட்டும் உயிர் பிழைப்பது என்பது மிகவும் அதிசய நிகழ்வு, ஆயுள் பலம் உள்ளது கொண்டு உயிர் பிழைத்தார், அதிஷ்டமும் கூட நின்றுள்ளது விமானத்தை தவற விட்ட பூமி சவுகான், அவருக்கும் அதிஷ்டம் துணை நின்றுள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை