உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீவிபத்தில் உயிர்தப்பிய மகன்; திருப்பதியில் மொட்டை அடித்து வேண்டிய ஆந்திர துணை முதல்வரின் மனைவி

தீவிபத்தில் உயிர்தப்பிய மகன்; திருப்பதியில் மொட்டை அடித்து வேண்டிய ஆந்திர துணை முதல்வரின் மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருமலை: சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீவிபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா மொட்டை அடித்து வேண்டி கொண்டார். ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஸ்னேவா. அவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zogjz4z2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஹைதராபாத்தில் தான் வசித்து வந்தனர். கடந்த வருடம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தனது குடும்பத்தினரை சிங்கப்பூர் அனுப்பிவிட்டார் பவன் கல்யாண். அங்குள்ள பள்ளிகளில் அவரது குழந்தைகள் படித்து வந்தனர்.சில தினங்களுக்கு முன்பு மார்க் சங்கர் படித்த பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் மார்ச் சங்கர் காயமடைந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, தனது குடும்பத்தாருடன் ஐதராபாத் திரும்பினார் பவன் கல்யாண்.இந்நிலையில், பள்ளியில் நடந்த தீவிபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா வேண்டியுள்ளார். இதற்காக நேற்று திருப்பதி சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். லெஜினோவா கிறிஸ்தவர் என்பதால், அதற்கான படிவத்தில் கையெழுத்து பெற்றனர். பிறகு, மொட்டை அடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கிய அவர், வி.ஐ.பி., தரிசனத்தின் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

VSMani
ஏப் 14, 2025 15:56

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஸ்னேவா. இவரும் நமது கலைஞர் போல மனைவி, துணைவி இணைவி என்று மூன்று பொண்டாட்டிக்காரர்போல. முதல்வர் துணை முதல்வர் என்றாலே இப்படித்தான் இருப்பார்களோ?


Babu
ஏப் 14, 2025 12:24

ஒரு கிறிஸ்தவ பெண்மணி ஹிந்து கடவுள் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையை ஏழு மலையான் அறிவான். இந்த குடும்பம் மேலும் மேலும் சிறக்க இறைவனை மனதார பிரார்த்திப்போம் .


Ramesh Sargam
ஏப் 14, 2025 12:11

திமுக தற்குறிகள்.


baala
ஏப் 14, 2025 10:19

மக்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பதுதான் மக்களுக்கு நல்லது செய்வதற்க்கு சமம்


Thetamilan
ஏப் 14, 2025 09:05

இதில் இந்துமதவாத மத்திய மாநில அரசுகள் என்ன கூறுகின்றன


தமிழ்வேள்
ஏப் 14, 2025 12:23

இஸ்லாமிய மதவாதிகள் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பங்களாதேஷ் அடிமைகளுக்கு ஹிந்து அரசுகள் பற்றி எதற்கு சிந்தனை?


Thetamilan
ஏப் 14, 2025 09:04

இதற்கெல்லாம் கோவிலுக்கு போனால் என்ன கிடைக்கும் ? இந்துமதவாத பயங்கரவாதிகளின் துணை மட்டுமே கிடைக்கும்


நிக்கோல்தாம்சன்
ஏப் 14, 2025 11:38

பாய் தொப்பி வெளியே தெரியுது பாருங்க, அவர்களின் நம்பிக்கையில் நாம மூக்கை நுழைப்பது தேவையில்லாதது, இது போல அவர்கள் உங்களிடம் உள்ள குறையை சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வரும்போது நீங்க இப்படி எழுதலாம், அதுவரை ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிகோ


Sivak
ஏப் 14, 2025 11:48

எதுக்கு ஓநாய் ஓலமிட்டு கொண்டிருக்கிறது .... பயங்கரவாதிகள் யார்னு ஓநாய்க்கு தெரியாதா?


Prasanna Krishnan R
ஏப் 14, 2025 13:50

உங்கள் உண்மையான பெயரில் கருத்து தெரிவிக்கவும்.


P. SRINIVASAN
ஏப் 14, 2025 09:02

ஓம் நமோ நாராயணாய.. இறைவன் அருள் பெற்று நலம்பெற வேண்டும்


Mathan
ஏப் 14, 2025 08:24

ஐயன் வெங்கடேஸ்வரன் அருள் அவர் குடும்பத்துக்கு பூரணமாக கிடைக்கட்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை