உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்

26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்

​புதுடில்லி: ​கல்வித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தீவிர நடவடிக்கை கோரி, கடந்த 26 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.​மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சென்று, மத்திய அரசு தரப்பில் உரிய உறுதிமொழி வழங்கியதை அடுத்து, இதனை ஏற்றுக் கொண்ட வாங்சுக், அவர்கள் வழங்கிய பழச்சாறை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.​

பின்னணி என்ன?

டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் இறுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சோனம் வாங்சுக், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். ​போராட்டத்தின் இடையே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=smyzznup&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது கோரிக்கைகள் தொடர்பாக பார்லிமென்டிலும், அரசு மட்டத்திலும் ஆலோசனை நடத்தப்படும் என மத்திய அமைச்சர்கள் நேரில் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட வாங்சுக் சம்மதித்தார். இந்​நிகழ்வின் போது சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Jaya Ram
ஜூலை 24, 2026 20:11

எப்படி யோ இவர் புரட்சிக்ளோஸ் இனி கர ப்பான்


Balasubramanian
ஜூலை 24, 2026 13:57

என்ன பெரிய உண்ணாவிரதம்?இதனால் தர்மேந்திர பிரதானும் மோடிஜி யும் எத்தனை ஏச்சு பேச்சுக்களை கேட்க வேண்டி இருந்தது! திருக்குறள் 160 இல் உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின் என்று திருவள்ளுவர் சொன்ன மாதிரி பிறர் சொல்லும் இன்னா சொல்லை பொறுத்தவர் தான் உண்ணா விரதம் இருந்தவரை விட பெரியவர்!


திண்டுக்கல் சரவணன்
ஜூலை 24, 2026 12:01

இந்த ஆண்டு நீட் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்கள் நிறைய பிரச்சனைகளை கடந்த சில மாதங்களாக சந்தித்து வந்துள்ளனர். சம்பத்தப்பட்ட துறையோ அல்லது மத்திய அரசோ உரிய கவனமோ ம் கரிசனமோ காட்டவில்லை. நல்ல தூக்கத்தில் இருந்த மத்திய அரசை உலுக்க ஒருவர் இவ்வளவு நாள் உண்ணா விரதம் இருக்க வேண்டி இருந்தது. இப்போதாவது விழித்தார்களே


sankaran
ஜூலை 24, 2026 11:03

எதற்காக இந்த உண்ணாவிரதம் என்று இன்னமமும் சரியாக விளங்க வில்லை.. சோனம் உண்ணாவிரதம் இருந்தால் ஏன் ராகுலும் பிரியங்காவும் உள்ளே புக வேண்டும்.. ஏன் அல்லா என்று கூச்சல் போடு போலீசை தாக்க வேண்டும்.. இது ஒரு சதி வேலையே..


Indhuindian
ஜூலை 24, 2026 10:14

All those apprehended in the agitation should be investigated by NIA and prosecuted as per NIA norms


Indhuindian
ஜூலை 24, 2026 09:48

இவர் என்ன பொட்டி ஸ்ரீராமுலுவா? அவரை சுத்தி உண்ணாவிரத்தம் இருக்கறதா சொல்லி ஸ்விக்கி, ஸிப்ட்டோ வுளெல்லாம் ஆர்டர் செஞ்சி பிட்ஜாவும் பர்கருமா உள்ளேதள்ளிகிட்டு இருந்தா இவர் வேறே என்ன பண்ண முடியும்


Sivagiri
ஜூலை 24, 2026 08:47

அண்ணாகஜாரே , கெஜாவால் , சி ஐ ஏ எதிர்ப்பு கும்பல் , பஞ்சாபி விவசாயிகள் மற்றும் கனடா தொடர்பு கும்பல்கள் , அதோடு அமெரிக்க தொடர்பு மதமாற்ற கும்பல்கள் , , இன்னும் ஏகப்பட்ட திடீர் குருமா கும்பல்கள் , அதோடு ஆனானப்பட்ட மம்தா , சிவசேனா , சிபு சோரன் , இங்கே கூடங்குளம் எதிர்ப்பு உதயகுமார் கும்பல் , பி எப் ஐ - தடைக்கு எதிரான கும்பல் , நக்சலைட்டுகள் , காஷ்மீர் கும்பல் , ஜிஹாதி கும்பல்கள் , அஸ்ஸாம் கும்பல் , குஜராத் கும்பல் , இன்னும் ஏகப்பட்ட தேசவிரோத கும்பல்கள் , எல்லாம் பாத்தாச்சு . . . . இன்னும் வடமேற்கு மதமாற்ற கும்பல் , மற்றும் பங்களாதேஸ் ஊடுருவல் கும்பல்கள் , பாக்கி இருக்கின்றன . . . என் ஐ ஏ , ஐ பி , ரா , எல்லாம் பலமாகிக் கொண்டு வருவதனால் எல்லாம் ஓட ஓட விரட்டப்பட்டு விட்டன . . .அதோடு தேசத்தின் மிலிட்டரி பவர் , மனி பவர் , பலமாகி விட்டன . . . இனி உலகில் எந்த அண்டர்க்ரௌண்ட் சக்தியாலும் , இங்கே விளையாட முடியாது . . .


Raman
ஜூலை 24, 2026 10:58

Brilliant Sivagiri


Ranganathan
ஜூலை 24, 2026 08:12

நல்லவேளை.. இந்த புதிய அன்னா ஹசாரே, புதிய அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்குவதை தவிர்த்து விட்டார். வாழ்த்துக்கள்..


C.SRIRAM
ஜூலை 24, 2026 10:35

இவர் அண்ணா ஹசாரே அல்ல . னொன்னா நொசாரே தான் .


கிஜன்
ஜூலை 24, 2026 07:18

நல்லது….அதுக்குள்ள இந்த சினிமாக்கார பொ.க்கிகள்… என்னா வரத்து வந்துட்டாங்க… தூங்கு மூஞ்சி செய்தி ஒலிபரப்பு அமைச்சரையும் கையோடு வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள்


spr
ஜூலை 24, 2026 07:08

இந்தியக் கல்வித்துறையில் என்ன மாற்றங்கள் தேவை என இதுவரையில் எவரும் குறிப்பிடவில்லை. மனப்பாட முறை அன்றியும் செயல்முறைக் கல்வி, திறன் வளர்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி - புதிய நுணுக்கங்கள் கண்டுபிடிப்புக்கள் போன்ற மிக முக்கிய மாற்றங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. தேர்வுகள் ஒரு வடிகட்டியே தவிர்க்க முடியாத ஒன்றே ஆனால் அது நியாயமானதாக இருக்க வேண்டும். அரசு அதற்கேற்ற பயிற்சியை பள்ளி படிப்பிலேயே ஒரு பகுதியாக வைக்க வேண்டும் குறைந்த கட்டணத்தில் பயிற்சிப் பட்டறைகள் அமைக்க வேண்டும் தேவையில்லாமல் மொழியை முன்னிறுத்திப் போராடாமல் மாணவர்களை கல்வியில் கவனம் கொள்ள அரசியலில் ஈடுபடாமல் போதை மது இவற்றின் ஆளுமையிலிருந்து தவிர்க்க வேண்டும் இதெல்லாம் நடக்குமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை