உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை

- நமது நிருபர்-அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது 15வது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, விண்ணில் இருந்து திரும்பி வந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை ஏவுதளத்தில் இருந்த ராட்சத இயந்திரக் கரங்கள் மூலம் பத்திரமாகப் பிடித்து சாதனை படைத்துள்ளது.இந்தப் பயணத்தின் போது 26 ஸ்டார்லிங்க் வி3 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. விண்கலம் பூமியை 14 முறை சுற்றி வந்து ஏவுதளத்திற்குத் திரும்பியது.இது விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.சுந்தர் பிச்சை வாழ்த்துகூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் செய்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி இருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவில், ''ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் இந்த பிடிப்பு இன்னும் அறிவியல் புனைகதை போலவே தோன்றுகிறது.இதை நேரில் பார்ப்பது நம்பமுடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது. வாழ்த்துகள் ஸ்பேஸ்எக்ஸ்'' என குறிப்பிட்டுள்ளார். சுந்தர் பிச்சையின் பாராட்டுக்கு எலான் மஸ்க் 'நன்றி' என்று பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
நவ 15, 2026 14:21

இந்த சந்தோசதத்தில் எலான் மஸ்க்


Raja k
நவ 15, 2026 14:04

இது எல்லாம் வரலாறு அல்ல... பிரச்னை... தனியார் ஒருவரின் கீழ் உலகம் செல்கிறதா? உலக நாடுகளை தனியார் ஒருவர் ஆட்டுவிக்க போகிறாரா? தனியார் ஒருவர் விண்வெளியில் அதிகாரம் செய்வது எத்தகைய பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதை இன்னும் உலகம் புரிந்து கொள்ளவில்லை..


சவுரி ராஜன்
நவ 15, 2026 20:26

ராஜா ஆராய்ந்து பிரிச்சு மேஞ்சுட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை