மேலும் செய்திகள்
திருப்போரூர் பகுதிகளில் மாம்பழ விற்பனை ஜோர்
03-Jun-2025
மதுரா:உத்தர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. மதுராவில் உள்ள பராமரிப்பு மையத்தில், யானைகளுக்கு பழங்கள், சேற்றுக் குளியல் மற்றும் ஓ.ஆர்.எஸ்., எனப்படும் வெப்பம் தணிக்கும் நீர் ஆகியவை வழங்கப்படுகிறது.மதுரா யானை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையத்தில், 32 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் நான்கு யானைகள் முற்றிலும் பார்வையற்றவை. அனைத்து யானைகளுமே உடல்நலம் பாதிக்கப்பட்டவை. இந்தக் கடும் கோடைகாலத்தில் இங்குள்ள யானைகள் மிகவும் அவதிப்பட்டன. எனவே, அவற்றுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மதுரா யானை பராமரிப்பு மைய தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் நாராயணன் கூறியதாவது:கடும் கோடையை சமாளிக்க யானைகளுக்கு தினமும் ஒரு முறை ஓ.ஆர்.எஸ்., நீர் வழங்கப்படுகிறது. பழங்கள் அதிகளவில் வழங்கப்படுகிறது. மற்ற உணவு வகைகளை விட, இந்தக் கோடையில் பழங்கள்தான் யானைகளை சற்று இயல்பு நிலையில் வைத்திருக்கின்றன.இந்தக் கடும் கோடையில் இங்குள்ள யானைகளை பராமரிப்பது மிகவும் சவாலான பணி. இங்குள்ள அனைத்து யானைகளுமே நடக்க மிகவும் சிரமப்படுகின்றன. நான்கு யானைகள் முற்றிலும் பார்வையற்றவை. வெப்பநிலையை தணிக்க கூடாரங்களில் தண்ணீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அதன் இயற்கையான வாழ்விடத்தை ஒத்திருக்கும் வகையில் கூடாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கூடாரத்திலும் ஒரு குளம் மற்றும் ஒரு மேடு அமைக்கப்பட்டுள்ளது. யானைகளின் உடல் வெப்பத்தை தணிக்க சேற்றுக் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல் வெப்பம் தணிவதுடன் ஒட்டுண்ணிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றன.இங்குள்ள யானைகள் மீண்டும் காடுகளில் உயிர்வாழ முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.மதுரா யானைகள் பராமரிப்பு முகாம், 2010ம் ஆண்டு துவக்கப்பட்டது.
03-Jun-2025