கர்நாடகா ஹாசனில் மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பால் விசாரணை நடத்த சிறப்பு குழு
பெங்களூரு : கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில், மாரடைப்பால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, மாநில அரசு சிறப்பு குழு அமைத்து உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கர்நாடக மாநிலம், ஹாச-ன் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஆலோசனைகுறிப்பாக இளம் வயதினர் இறக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 18 பேர் மாரடைப்பால் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், நேற்று மேலும் நால்வர் உயிரிழந்தனர். தாலுகா அலுவலக ஊழியர் குமார், 57, அரசு கல்லுாரி பேராசிரியர் முத்தைய்யா, 58, லேபாக்ஷி, 50, ராணுவ வீரர் லோஹித், 38, ஆகியோர் நேற்று ஒரே நாளில் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். இந்த இறப்புகள், மாநில சுகாதாரத் துறையை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த, மாநில அரசு சிறப்பு குழு அமைத்து உள்ளது.இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து, பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி.,யும், பிரபல இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் மஞ்சுநாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திஉள்ளார். விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்த நேரம் கேட்டுள்ளார்.சிகிச்சை முறைஇதுகுறித்து மஞ்சுநாத் கூறியதாவது:மாரடைப்பில் இருந்து விரைவாக மீண்டு வரவும், இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும், இதய தசைகளுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கவும், 'எஸ்.டி.எலிவேஷன் மயோகார்டியல் இன்பார்க்ஷன்' என்ற 'ஸ்டெமி' சிகிச்சை முறை, கர்நாடகாவின் 86 தாலுகா மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், ஹாசன் மாவட்டத்தில் இத்திட்டம் இல்லை. இதுவே, அங்கு மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். ஸ்டெமி திட்டம், மாரடைப்பால் இறக்கும் அளவை குறைக்கும் நவீன சிகிச்சை முறை. ஹாசனில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இது தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன். பிரதமரை சந்தித்து, ஸ்டெமி திட்டத்தை ஹாசனுக்கு விஸ்தரிக்கும்படி வேண்டுகோள் விடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.