உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு

பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதம் நடத்த பார்லிமென்ட் சிறப்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.பஹல்காம் சம்பத்தை அடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியபடி இயங்கும் பயங்கரவாதிகளின் நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்கும் பொருட்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளும் கிடைத்தன. தற்போது இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்தியா, பாக். மோதல் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பார்லிமென்ட் சிறப்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியின் தலைவரான சரத் பவர் இவ்வாறு கூறியிருப்பது, கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.இது குறித்து சரத் பவர் மேலும் கூறியதாவது; பார்லி. சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மிகவும் உணர்ச்சிகரமான, ரகசியம் பொதிந்த பிரச்னை. அப்படித்தான் இது போன்ற சில தருணங்களில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்பவார், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Anantharaman
மே 14, 2025 08:50

காங்கிரஸ் மட்டுமே சபை கூட்டி சித்தூர் தாக்குதல் பற்றி விவாதம் கோருகிறது. ஏன் தெரியுமா? சபையில் தெரிய வரும் தகவல்களை உடனே பாகிஸ்தானியருக்கு தெரிவிக்கத்தான். கேடு கெட்ட தேசத் துரோகிகள். இன்னமும் சோனியா, ராவுலை சிறைப் படுத்த ஏன் தயக்கம்?


DHANASEKARAN DEVAN
மே 14, 2025 05:57

ஒரு இந்திய குடிமகனாக நமது மத்திய அரசின் முடிவுகளை மனதார நம்புகிறேன். இராணுவ முடிவுகளை உங்கள் பொறுப்பில் எடுக்கவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நாட்டுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை மென்மேலும் எதிர்பார்க்கிறோம்


naranam
மே 14, 2025 04:15

அதான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியாகி விட்டதே? இன்னும் என்ன தேவை இந்த எதிரியின் கைக்கூலிகளான இவர்களுக்கு? பிஜேபி இதற்கு ஒத்துக்கொள்ளாது என்று நம்பலாம். சரத் பவார் சொல்வது தான் சரி. எதிரிகளுக்கு நம் ரகசியங்கள் தெரியாமல் வைத்திருக்க வேண்டும் என்பதே சரி.


spr
மே 13, 2025 17:37

"பார்லி. சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மிகவும் உணர்ச்சிகரமான, ரகசியம் பொதிந்த பிரச்னை. அப்படித்தான் இது போன்ற சில தருணங்களில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்." இதுதான் ஒரு முதிர்ந்த பொறுப்புள்ள அரசியல்வாதி சொல்ல வேண்டிய ஒன்று காங்கிரசும் இதர கட்சிகளும் அங்கே பொறுப்பில்லாமல் பேசுவார்கள் என்பது தெரிந்தும் இக்கூட்டம் தேவையில்லை நிச்சயமாக காங்கிரஸ் ரபேல் போர்விமானம் ஒன்று இழப்பு என்று சொல்லப்படுவதை முன் வைத்து அவற்றை வாங்கியதில் முறைகேடுகள் குறித்து விளக்கம் கேட்பார்கள் விரிவாகப் பேசுவார்கள் அவசியமா


Sri Ra
மே 13, 2025 16:33

அன்னான் முடிவு பண்ணிட்டாரு ஜம்பிங்


R. SUKUMAR CHEZHIAN
மே 13, 2025 16:24

இது தான் தேசபக்தி, அரசியல் முதிர்ச்சி, திரு சரத்பவார் அவர்களை வணங்குகிறேன். காங்கிரஸ் நேரு குடும்பம் திருந்த வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், நக்சல்பாரிகள், திமுக, திரினாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.


Dharmavaan
மே 13, 2025 15:29

பப்பு ராகுல்கான் போன்றவர்களின் நோக்கம் விவரங்களை எதிரிக்கு தெரிவிக்க உஷார்படுத்த .இவர்களின் குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்தப்பட வேண்டும்


Rathna
மே 13, 2025 13:36

நாட்டின் பாதுகாப்பை விற்க கூட தயாராகும் கூட்டம். தேச விரோத சக்திகள் நாட்டின் கிழக்கிலும், தெற்கிலும் அதிகமாக உள்ளது. பங்களாதேஷிகளை, பாகிஸ்தானியர்களை உள்ளே விட்டு வோட்டு வாங்கலாம் என்று கனவிலேயே உள்ளனர்.


தத்வமசி
மே 13, 2025 13:20

இந்திய எல்லைக்கு அப்பால் உள்ளவர்களுக்கு உதவி செய்வது போல இங்கு ஆளும் அரசை கேள்வி கேட்பது. இந்த மாதிரியான அரசியல் நோயாளி அறிவிலிகளை நாட்டுக்கு பாரம் என்றே சொல்ல வேண்டும்.


Kumar Kumzi
மே 13, 2025 13:18

நாட்டின் நலன் கருதி சீனா பாக்கிஸ்தான் கைக்கூலியாக செயல்படும் கொங்கிரஸ் திருட்டு திராவிஷ திமுக கேடுகெட்ட பங்களாதேஷ் கைக்கூலியான திரிமுனால் கொங்கிரஸ் கட்சிகளை தடை செய்ய வேண்டும்


சமீபத்திய செய்தி