உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு நிவாரணம் தேவை!

சிறப்பு நிவாரணம் தேவை!

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், ஹிமாச்சல் மாநிலங்கள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பிரதமர் மோடி இந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்புகளை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் உதவி தற்போதைய சூழலில் மிகவும் அத்தியாவசியம். - ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

சிறையில் அடைப்பேன்!

அசாமில் அரசு நிலங்கள், வனப்பகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அகற்றி வருகிறோம் . இது ஒரு சமூகத்துக்கு எதிரானது என ஜாமியத் உலாமா- -ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மஹ்மூத் மதானி கூறியுள்ளார். இதே போல் பேசி வந்தால் அவரை சிறையில் அடைப்பேன்.- ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,

கடிதங்கள் மாயம்!

டில்லி ஆம் ஆத்மி அரசில் நான் அமைச்சராக இருந்த போது துறை செயலருக்கு பல்வேறு பணிகள் குறித்த கடிதங்களை அனுப்பினேன். அவை எதுவும் அரசின் இணைய தரவுகளில் இல்லை. பா.ஜ., அரசில் காணாமல் போயுள்ளது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. - சவுரவ் பரத்வாஜ் மாநில தலைவர், டில்லி ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி