உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்தினர் நலனுக்காக கோவிலில் சிறப்பு யாகம்

ராணுவத்தினர் நலனுக்காக கோவிலில் சிறப்பு யாகம்

புதுடில்லி:பாகிஸ்தானுடன் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்காக டில்லி கோவில்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் யாகம் நடத்தப்படுகிறது.சத்தர்பூர் துர்கா கோவிலில் நடந்த கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில், ஏராளமானோர் பங்கேற்று நம் ராணுவ வீரர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர். துர்கா சப்தசதி மற்றும் ஹனுமன் சாலிசா ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுந்தரகாண்டம் வாசிக்கப்பட்டது. மேலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் பூதேவி ஸ்துதி பாராயணம் செய்யப்பட்டது. ரோஹினி ஜகதாம்பா கோவில் மற்ரும் ஹவுஸ்காஸ் ஜெகந்நாதர் கோவில்களில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.இதேபோல, மாநகரில் உள்ள பல கோவில்களில் இன்று முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் யாகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை