வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏதோ ஒரு படத்தில் துபாய்க்கு கூட்டிட்டு போறேன்னுட்டு படகுல பம்பாய ஒரு சுத்து சுத்தி காட்டி இறக்கி உடுவாங்களே...
இந்திய விமான நிறுவனங்களில் பயணிப்பது பாதுகாப்பானது இல்லை போல் தெரிகிறது .
சென்னை: மதுரையில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவானில் பறந்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மதுரையில் இருந்து 160 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு கிளம்பி பயணித்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gad4om1c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொழில்நுட்ப கோளாறுக்கு என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந் நான்கு நாட்களுக்கு முன்னர் பாட்னா சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டில்லி திரும்பியது. அதேபோல், நாக்பூரில் இருந்து டில்லி கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால் அந்த விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு நிகழ்வாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏதோ ஒரு படத்தில் துபாய்க்கு கூட்டிட்டு போறேன்னுட்டு படகுல பம்பாய ஒரு சுத்து சுத்தி காட்டி இறக்கி உடுவாங்களே...
இந்திய விமான நிறுவனங்களில் பயணிப்பது பாதுகாப்பானது இல்லை போல் தெரிகிறது .